உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்நாட்டு அரசின் கடமை

91

ஐசக்கு நியூட்டன் (Isaac Newton) வான நூலாராய்ச்சி யாளர்; சேம்சு வாட்டு (James Watt) பொறிவினையாராய்ச்சி யாளர்; தார்வின் (Darwin) உயிர்நூலாராய்ச்சியாளர்; கால்டுவெல் (Caldwell) மொழியாராய்ச்சியாளர்; தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் இசை யாராய்ச்சியாளர்.

இயங்குபொறிப் புதுப்புனைவாளருள், சேம்சு வாட்டு நில நீரியங்கியும், இரைட்டு (Wright) உடன்பிறந்தார் வானியங்கியும், எடிசன் திரைப்பட வியங்கியும், மார்க்கோனி ஒலியியங்கியும், பிறர் பிறவும் ஆராய்ந்து புனைந்தனர்.

பொருளாட்சி (Economics) என்னும் ஒரே துறையில், மால்தூசு பொருளாக்க மக்கட்பெருக்க வேக வேறுபாட்டை யும், காரல் மார்க்கசு பொருள்முதல் தொழில்முதல்களின் தொடர்பையும், பர். சந்திரசேகரர் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தையும் ஆராய்ந்தனர்.

மொழியென்னும் வியன்பெருந்துறையில், ஆயிரக்கணக் கான மொழிகள் உள்ளன. தமிழ் என்னும் ஒரு மொழியுள், இலக்கியம் இலக்கணம் என ரு பகுப்புகளுள்ளன. இலக்கியத் துள், செய்யுள் உரைநடை என இரு பாகுபாடுண்டு. செய்யுளுள், கழகச் செய்யுள் பிற்காலச் செய்யுள் என்றும், பாச்செய்யுள் பாவினச்செய்யுள் என்றும், பெருவனப்பு (பெருங்காவியம்) சிறுவனப்பு (சிறுகாவியம்) என்றும், இயல் இசை நாடகம் என்றும், பிறவாலும் பல பிரிவுகள் உள்ளன. ஒரே பனுவல்பற்றி யும் பாடிய புலவர், பாடிய காலம், பனுவற் பொருள், பனுவற் சொற்கள், பனுவற் சிறப்பு முதலிய பல ஆராய்ச்சித் தலைப்புகள் உள்ளன. ஒரு பனுவற் சொற்களுள்ளும் ஒரே சிறப்புச்சொற் பற்றிய ஆராய்ச்சியும் உண்டு.

இங்ஙனம், ஆராய்ச்சித் துறைகள், அறிவியற் கலவை முதல் தனிச்சொல் வரை ஆழ்கடல்போற் பரந்தும் ஊற்றுக் குழி போற் சிறுத்தும் ஆயிரக்கணக்காகவுள்ளன. அவற்றுள் எது பற்றி ஆராய்ந்து இடுநூல் (Thesis) விடுப்பினும், ஒரே மதிப்புள்ள பண்டாரகர் பட்டம் (Ph.D.) கிடைத்துவிடுகின்றது. அரசினர் இதை அறிவதில்லை. பட்டம் பெற்றவரும் இவ்வறியாமையை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆராய்ச்சிப் பட்டம் பெற்றவரையெல்லாம் அனைத்து மறிந்தவர் என்று கருதி, சில செய்யுள்களையே அல்லது பனுவல்களையே ஆய்ந்த ஒரு புலவரிடம், உலக முதன்மொழியும் ஆழ்ந்த மொழிநூலாராய்ச் சியாலன்றி வேறெவ்வகையாலும் அறிய வியலாததுமான தமிழின்