உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




92

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

வரலாற்றை எழுதுமாறு அரசு ஒப்படைப்பின், அவர் தம் தகுதி யின்மையை வெளிப்படுத்தாது, தம் பெயரையும் செல்வத்தையும் மிகுக்க இதுவே சிறந்த வழியென்று உடனே ஒப்புக்கொள்கின்றனர். இது அரசின் ஏற்பாடாதலால், இதைக் கண்டிக்க எவருக்கும் நாவெழுவதில்லை; கையும் வருவதில்லை. வாய்மைத் தமிழராயின், உண்மையைச் சொல்வர், எழுதுவர். வையாபுரிகளாயின், மந்திர வலிமை பெற்றவர்போல், தென் மாவாரியில் மூழ்கிய குமரிநிலத் தமிழரை நண்ணிலக் கடற்கரை யினின்று வருவிப்பதோடு, அவரை மொழியில்லாத காட்டு விலங்காண்டிகளாகவுங் காட்டுவர்.

ஒருவர் தம் ஆராய்ச்சிப் பட்டத்திற்கு எப்பொருள்பற்றி இடுநூல் விடுத்தாரோ, அப் பொருள்பற்றியே அவருக்கு அறிவும் அதிகாரமும் உண்டென்றறிதல் வேண்டும். அறிஞர் இயற்றிய அருநூல்களை மட்டுமன்றி, நாடு முழுதும் வழங்கும் நனந்தமிழையும் ஆராயாது, ஒரு சிற்றூர்க் கொச்சைப் பேச்சையே ஆய்ந்து ஒருவர் பட்டம் பெற்றதாகவும், மற்றொ ருவர் முன்பொருவர் விடுத்த இடுநூலையே மாற்றி யெழுதிக் ‘கீழைக் கல்வித் தலைவர்' (M.O.L) ஆனதாகவும் சொல்லப்படு கின்றது.

இனி, பெருங்கல்லூரித் தமிழாசிரியரெல்லாம் பெரும் புலவரென்றும், அவர் தமிழ்த்துறைகள் அனைத்தையுங் கரை கண்டவரென்றும், இரு தவறான கருத்துகள் இருந்து வருவதால், அவரும் அதைப் பயன்படுத்திக்கொண்டு சில முதன்மையான குழுக்களின் உறுப்பினராகி, பேரறிஞர் அரும்பாடுபட்டு ஆராய்ந் தெழுதிய தமிழ் வரலாற்று நூல்களைப் பாடப் பொத்தகமாக வராதவாறு தடைசெய்வதாகவுந் தெரிகின்றது. தமிழ்ப் புலவருள் வையாபுரிகள் என்றும் வாய்மைத் தமிழரென் றும் இரு சாரார் உண்டென்பதை அரசு அறிதல் வேண்டும்.

எத்துறை யாராய்ச்சிக்கும் அளவிறந்த ஆற்றல் பிறப்பி லேயே அமையவேண்டியிருப்பதால், ஆராய்ச்சியாள ரெல்லாம் இறைவனால் அமர்த்தப்பட்டவரே யாவர். ஆகவே, தனிப்பட்ட ஆராய்ச்சியாளர் பணியை ஒரு குழுவார் கூடிச் செய்யமுடியாது. அறிவியலாரும் பொறிவினைஞரும் ஆயிரக்கணக்கானவர் இன்று இந்தியாவிலுள்ளனர். ஆயினும், அவ் வனைவருங் கூடினும் கோவைக் கோ.து. நாயுடுக்கு ஈடாகார். இங்ஙனமே மொழியாராய்ச்சி சொல்லாராய்ச்சித் துறைகளிலும், இற்றைத் தமிழ்ப் பேராசிரியருட் பெரும்பாலார் அழுக்காற்றுருவங்