உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்நாட்டு அரசின் கடமை

93

களாயிருந்து, தமிழ்ச் சொல்லாராய்ச்சிக்கும் சொற்பிறப்பியல் அகரமுதலித் தொகுப்பிற்கும் ஒரு குழுவையே அமர்த்த வேண்டுமென்று கட்டுப்பாடாகச் சொல்லி வருகின்றனர். அதனால், அரசும் பல்கலைக் கழகங்களும் அதற்குரியவரை அமர்த்தத் தயங்குகின்றன. தன்னலப் பொறாமைக்காரர் தாமும் ஒரு நற்பணி செய்வதில்லை; பிறரையுஞ் செய்யவிடுவதில்லை.

ஆங்கில மொழியில் ஐந்து சொற்பிறப்பியல் அகர முதலிகள் (Etymological Dictionaries) உள்ளன. அவை, கீற்று (Skeat), சேம்பர்சு (Chambers), கிளேன் (Klein), வீக்கிலி (Weekly), ஆனியன்சு (Onions) என்னும் தனிப்பட்டவர் தொகுத்தவையே. அவற்றைக் கண்டேனும் அழுக்காற்றுப் புலவர் அறிவடைக.

1956இல், 'செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி’ தொகுத்தற்கென்றே, நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அமர்த்தப்பட்டேனெனினும், பர். சேதுப்பிள்ளையும் பர். மீனாட்சிசுந்தரனாரும் என்னைத் தடுத்துவிட்டதனால் அப் பணி கெட்டது. அவரும் அப் பணியைச் செய்தாரில்லை; தமிழ் வளர்ச்சிக் கென்றே அமைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் தமிழைக் கைவிட்டது. தமிழ்ப்பற்றும் நெறிப்பட்ட ஆராய்ச்சியும் இல்லாதவர் தமிழ்த் துறைத் தலைவராக இருப்பதால் நேர்ந்த கேடு இது.

தமிழ் குமரிநாட்டில் தோன்றியதென்றும், குமரிநாட்டுத் தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமாகுமென் றும், நான் அரை நூற்றாண்டு நடுநிலையாய் ஆய்ந்து கண்ட வுண்மையை நாட்டின், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு நடுவணரசினின்று நல்கை (Grant) வராதென்று, இணைவேய்ந் தர்க்கும் துணை வேய்ந்தர்க்கும் அச்சம் ஊட்டப்பட்டதாகத் தெரிகின்றது. தமிழ்ப்புலவரனைவரும் தமிழின் தலைமைபற்றிய வுண்மையை ஒப்புக்கொள்ளின் நடுவணரசு எங்ஙனந் தடுக்க முடியும்? வாய்மையே வெல்லும் (ஸத்ய மேவ ஜயதே) என்பதை வழிகாட்டும் நெறிமுறையாக வைத்துக் கொண்ட அரசு, பொய்மையே வெல்லும் என்பதை எங்ஙனம் நடைமுறையிற் கடைப்பிடிக்க முடியும்? வெளி நாட்டினின்று வந்த ஒரு சிறுவகுப்பார், தமிழ்நாட்டிலிருந்து கொண்டு சமற்கிருதம் தேவமொழி என்று துணிந்து பொய் சொல்லும் போது, தமிழர் தம் நாட்டிற் கோடிக்கணக்கினரா யிருந்துகொண்டே, தம் மொழியைப்பற்றிய உண்மையை எடுத்துச் சொல்ல ஏன் அஞ்சிச் சாகவேண்டும்? தமிழன் பிராமணனுக்குப் பிறப்பில் தாழ்ந்தவ