உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




94

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

னென்றும், தமிழ் வழிபாட்டிற்குத் தகாத மொழியென்றும், என்றும் நம்பிக்கொண்டிருப்பின், என்றுதான் தமிழன் விடுதலை பெறவும் முன்னேறவும் முடியும்?

சமற்கிருதம் தேவமொழி யென்பது, பிராமணன் நிலத் தேவன் என்பதை அடிப்படையாகக் கொண்டது. இவ்விரு மூடக்கொள்கையும் உண்மையெனின், ஒரு தமிழ்ப்புலவர் மாநாட்டில் தலைசிறந்த தமிழறிஞரை நடுவராகக் கொண்ட பட்டிமன்றத்தில், நாட்டப்பட வேண்டும். அல்லாக்கால், உலகுள்ளவரையும் தமிழாரியப் போராட்டமும் தமிழன்- பிராமணன் என்னும் வேறுபாடும் இருந்துகொண்டேயிருக்கும். நாட்டில் உண்மையான அமைதியிராது.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டமட்டில் ஒருவன் தமிழனாகான். தமிழ்ப்பற்றுள்ளவனே உண்மைத்தமிழனா வான். பிராமணர், தம் முன்னோர் மொழி வழக்கற்றுப் போன தனால், தாம் குடியேறிய அவ்வந் நாட்டு மொழியையே தாய் மொழியாகக் கொண்டுள்ளனர். இந்தி, வங்காளம், ஒரியா, குசராத்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளெல்லாம் பிராமணர் தாய்மொழிகளாகும். தமிழர்க்கோ தமிழ் ஒன்றே தாய்மொழி.

பிராமணர் தமிழ்நாட்டில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருப்பது, இன்றியமையாமையும் போக்கற்ற நிலைமை யும் பற்றியதேயன்றி விருப்பம் பற்றியதன்று. தமிழிற் பிறந்து தமி ழில் வளர்ந்து தமிழாலேயே வாழ்ந்துவரினும், பிராமணர்க்கு என்றும் அவர் முன்னோர் இலக்கிய மொழியாகிய சமற்கிருதத் திலன்றித் தமிழிற் பற்றில்லை. 'தமிழ்த் தெய்வம்' என்று சிலராற் போற்றப்படும் பெரும் பேராசிரியர் உ.வே.சாமிநாதையர்க்கும், வாய்மொழி தமிழேனும் வழுத்து மொழி சமற்கிருதமே. பரிதிமாற் கலைஞன் போன்ற ஒருசிலரே இதற்கு விலக்காவர்.

தமிழ் மீண்டும் அரியணையேறித் தமிழ்நாட்டு முப்பல் கலைக் கழகங்களிலும் தலைமை பெற்றாலன்றி, தமிழன் வாழ வழியேயில்லை. தமிழ் விடுதலையே தமிழன் விடுதலை. எல்லார்க்கும் ஒவ்வொன்றெளிது

ஒரு பணிக்குப் பலர் பயிற்சி பெற்றிருப்பினும் அல்லது தேர்வு தேறியிருப்பினும். ஒவ்வொருவரும் ஓர் உட்பிரிவிற் சிறந்தவராயிருப்பர். தமிழ்ப்புலவருள், ஒருவர் நாவலராகவும், ஒருவர் பாவலராகவும், ஒருவர் உரைவலராகவும். ஒருவர்