உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்நாட்டு அரசின் கடமை

95

நூல்வலராகவும், ஒருவர் ஆய்வலராகவும், ஒருவர் நினைவல ராகவும், ஒருவர் புனைவலராகவும் இருக்கலாம். ஒருவர் இலக் கியத்தையும், ஒருவர் இலக்கணத்தையும், ஒருவர் ஒருவகைப் பனுவற் றொகுதியையும், ஒருவர் ஒரு விழுப்பெரு நூலையும், ஒருவர் கல்வெட்டுத் தொகுதியையும் சிறப்பக் கற்றிருக்கலாம். இவ் வேறுபாட்டை அரசு ஆய்ந்தறிதல் வேண்டும்.

"வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான் தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும் வல்லோமே யென்று வலிமைசொல வேண்டாங்காண் எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது."

"வெண்பாவிற் புகழேந்தி பரணிக்கோர்

(தனிப்பாடல்)

சயங்கொண்டான்விருத்தமெனும்

ஒண்பாவிற் குயர்கம்பன் கோவையுலா அந்தாதிக் கொட்டக்கூத்தன் கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள் வசைபாடக் காளமேகம் பண்பாகப் பகர்சந்தம் படிக்காச லாலொருவர் பகரொணாதே."

(தனிப்பாடல்)

இவ் வுண்மையை அரசு உணர்ந்து ஒவ்வொருவர் தனித் திறமையையும் பாராட்ட வேண்டும்; புலவரும் பிறர்மீது பொறாமை கொள்ளாது செருக்கொழிதல் வேண்டும்.

நாட்டு மக்கட்கு நாட்டுப் பணியில் முதலிடம்

இந்தியா, ஓராட்சிக் குட்பட்டிருப்பினும். ஆப்பிரிக்காவும் ரோப்பாவும் போலப் பன்னாடு சேர்ந்த உட்கண்டமாகும். பண்டை இந்தியத் தொன்மங்கள் (புராணங்கள்) 56 நாடுகளை ஒரு தொகுதியாகக் கூறுகின்றன. ஆங்கிலர் ஆட்சிக்காலத்தில் சிறியவும் பெரியவுமாக 545 உள்நாட்டரசுகள் இருந்தன. அவை யாவும் ஆங்கிலர் படை வன்மையாலும் ஆட்சித் திறமையாலும் ஓராட்சிக்குட்கொண்டு வரப்பட்டன. ஆங்கிலர் நீங்கி முப்பதாண்டாயினும், இன்னும் மக்கள் நிலைமை மாறவில்லை. ஏனை நாடுகளிலில்லாத பிறவிக்குல வேற்றுமை இந்தியாவின் பழைய நிலைமையைப் போற்றிக் காத்து வருகின்றது.

சிலர் தென்னாட்டுத் திரவிடரெல்லாம் ஓரினம் என்பர். ஐரோப்பாவில், இத்தாலியர் பிரெஞ்சியர் இசுப்பானியர் போர்த்துக்கீசியர் முதலியவர் ஒரே பேரினத்தாரே. ஆயினும், பல்வேறு நாட்டினங்களாக (Nations) மாறியுள்ளனர். இனி, ஆங்கிலேயர், ஆலந்தியர், தேனியர், செருமானியர், நார்வேயர், சுவீதியர் முதலியோரும் ஒரு பேரினத்தாரே. அங்ஙனமே, தமிழர் தெலுங்கர் கன்னடியர் மலையாளியர் என்போரும், ஒரே