உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




96

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

பேரினத்தாரேனும் பல்வேறு நாட்டினத்தாரே என்பதை, அவர் மொழி தோற்றம் பழக்கவழக்கம் முதலியவற்றின் வேறுபாடுகள் தெளியக் காட்டும். "தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு" என்று ஒரு குடும்பத்தைக்கூடப் பொருளாட்சி பற்றி வேறுபடுத்திக் காட்டுகின்றது பழமொழி. அஃதாயின், பல நாட்டினங்கள் எங்ஙனம் ஒன்றாகும்?

இனி, வட இந்தியாவோ, ஆப்பிரிக்கா போலத் தென்னாட் டினும் வேறுபட்ட பல்வேறினத்தாரைக் கொண்டதாகும்.

நாட்டுப் பன்மையால் மட்டுமன்றி, நிலப்பரப்பாலும் இந்தியா ஓர் உட்கண்டம் என்பதை, இந்தியா பரப்பளவில் ரசியா நீங்கிய ஐரோப்பாவிற்குச் சமம் என்று, இராகொசின் (Ragozin) ‘வேத இந்தியா' (Vedic India) என்னும் நூலிற் கூறியிருப் பதால் அறியலாம்.

தமக்கென ஒரு நாடின்றி இந்தியா முழுதும் பரவியிருக்கும் ஓர் இனத்தாரும், மக்கட்பெருக்குங் கல்விப் பெருக்குங் கொண்டு பிற நாடுகளிற் பிழைக்க விரும்பும் சிறு நாட்டாரும், அளவிற்கு மிஞ்சி ஆட்சிசெய்ய அவாவும் அதிகார வெறியரும், நடுநிலை திறம்பி, இயற்கைக்கும் வரலாற்றிற்கும் மாறாக, இந்தியா முழுதும் ஒன்றென்றும், எவரும் எங்கும் வாழலாம் என்றும், எந்நாட்டையும் அடக்கியாளலாமென்றும், பிதற்று வது பொருந்தாது. ஆங்கிலர் ஆட்சியில் ஒரே ஆள்நிலமாயிருந்த பேரிந்தியா, ஏன் இந்தியா வென்றும் பாக்கித்தானம் என்றும் வங்காளம் என்றும் மூவேறாகப் பிரிந்துள்ளது என்பதை ஊன்றி நோக்குக.

போக்குவரத்து, தற்காப்பு, வெளிநாட்டுறவு, நடுத்தீர்ப்பு என்னும் நாற்பெருந்துறையில்தான், நடுவணரசிற்கு அதிகார முண்டு. ஏனைத் துறைகளிலெல்லாம் நாட்டுப் பணிக்கு நாட்டு மக்களே அமர்த்தப்பெறல் வேண்டும்.

மராத்தி நாட்டுச் சிவசேனை நீடு வாழ்க!

பெண்டிர்க்கு அலுவற்பேறு

கல்விப்பேறுபோல் அலுவற்பேறும் பெண்டிர் பிறப் புரிமையென்று கருதலாம். புது நாகரிகத்திற் சிறந்த மேலைநாடு களிற் பெண்டிர்க்குஞ் சமவுரிமையாகக் கல்விப்பணி யளிப்பதை, இந்தியாவும் பின்பற்றலாம்.