உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




X

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

முகவுரை

மண்ணுலக வாழ்விற் பெரும்பாலார்க்குத் துன்பமே மிகுவதனால், அவ்வுலகம் மண்போல் இழிந்ததென்றும், விண்ணுலகம் ஒருவராலுங் கண்டறியப்படாவிடினும், அது மக்களினும் உயர்ந்த தேவர் வாழிடமாதலால் எல்லார்க்கும் இன்பந்தரும் வகையிற் பொன்போற் சிறந்ததென்றும், பொதுவாகச் சொல்லவுங் கருதவும் படுகின்றன.

மண்ணுலகத்திலும், தக்க அரசிடமிருந்து செங்கோலாட்சி செய்யின் விண்ணுலக இன்பம் நுகர்தல் கூடும். இன்பம் என்பது, அவரவர் தேவைப் பேற்றையும் பொந்திகையையும் (திருப்தியையும்) பொறுத்ததேயன்றி, செல்வச் சிறப்பையும் பல்வகை யுயர்திற நுகர்ச்சியையும் பொறுத்ததன்று. மேலும், விண்ணுலக வின்பம் வீட்டின்பம் போல் அளவிறந்ததும். மேலும், விண்ணுலக வின்பம் வீட்டின்பம் போல் அளவிறந்ததும் நிலையானதும் அன்றாதலின், அது மனநிறைவான மண்ணுலகச் செங்கோலாட்சி வாழ்வினுஞ் சிறந்ததாகாது.

உலகில் முததன்முதல் தோன்றிய ஆட்சிவகையான கோவரசு (Monarchy) செங்கோலாட்சியா யிருந்த காலத்திலும் இடத்திலும், மக்கட்டொகை வரம்பிற்குட்பட் டிருந்ததுவரை, விண்ணின்பம் விளைப்பதா யிருந்தது. இந் நூற்றாண்டிலோ, மக்கட்டொகை இரு மடங்கும் மும்மடங்கும் நான்மடங்குமாகப் பெரு ருகி, விளைவு குன்றி உணவுத்தட்டு ஏற்பட்டு மக்கள்பட்ட இடர்ப்பாட்டை, ஆங்காங்கும் இடையிடையும் தோன்றிய காடுங்கோலாட்சி மிகுத்து விட்டதனால், குடியரசு (Democracy), மக்களாட்சி (Rupublic), கூட்டுடைமை (Socialism) ஆகிய பொதுமக்க ளரசுகள் ஏற்பட்டுவிட்டன.

கூட்டுடைமையைப் பொதுவுடைமை (Communism) என்று பலர் தவறாகக் கூறுவர். பண நடமாட்டமின்றி, எல்லாருந் தத்தமக்கியன்ற பணியைச் செய்து, எல்லாப் பொருள்களையும்