உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முகவுரை

xi

ஒத்தவுரிமையொடு பயன்படுத்தி, ஒற்றுமையாக ஒருங்கே வாழும் குடும்ப அல்லது கூட்டுக் குடும்ப வாழ்க்கையே பொதுவுடைமை யாகும்.

பொதுவுடைமை யென்று தவறாகச் சொல்லப்படும்

கூட்டுடைமை

நடைமுறையில் முதன்முதலாக 1917-ல் ரசியாவில் தோன்றியதனால், அதுவே அக் கொள்கைத் தொடக்கமென்று எல்லாருங் கருதிக்கொண்டுள்ளனர். எல்லாத் தொழிலர்க்கும் எக்காலத்திற்கும் ஏற்றதும், வகுப்புவேற்றுமையைத் தோற்றுவிக்காததும், உடம்பியற் பண்பாட்டையும் உளவியற் பண்பாட்டையும் ஒருங்கே வளர்ப்பதும், இறை வழிபாட்டை மறுக்காததும், தனியுடைமையை விலக்காததும், பகுத்தறிவிற்கு முற்றும் ஒத்ததும், உயரியதுமான கூட்டுடைமை யாட்சி அல்லது வாழ்க்கை, கி.மு. அல்லது கி.பி. முதல் நூற்றாண்டிலேயே திருக்குறள் வாயிலாகத் திருவள்ளுவரால் தெரிவிக்கப்பட்டு விட்டது. அதுவே இப் பொத்தகத்தில் விரிவாக கூறப் பட்டுள்ளது. படித்தறிக.

vot என்னும் ஆங்கிலச்சொல் vow (L.voveo) என்னும் வினையினின் று தோன்றியுள்ளதால், நேரி என்று இப் பொத்தகத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

காட்டுப்பாடி விரிவு,

31.8.1973

ஞா.தேவநேயன்