உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




98

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

பள்ளிகளிலும் பெண் பள்ளிகளிலும் மகளிர் கல்லூரிகளிலும் அவர் ஆசிரியைமாராகப் பணியாற்றலாம். வணிகத்துறைக் கல்வி பயின்றிருப்பின், அரசினர் அலுவலகங்களில் கணக்கப் பணியேற்கலாம். பல்வேறு மகளிர் தொழிற்சாலைகளும் அரசு நிறுவலாம்.

கல்வி கற்றல் இருபாலார்க்கும் பொதுவுரிமை. ஆயின், பெண்டிர் ஆடவர்க்குச் சரிசமமாக நூற்றுக்கு நூறு கல்விப்பணி பெறல் வேண்டுமென்பது சரியன்று. பெண்பாற்குச் சிறப்பான வும் இருபாற்கும் பொதுவானவுமான பல பதவிகள் பெண்டிர்க் குக் கொடுக்கப்படலாம். விகிற்றோரியா (Victoria) மாவரசியாரும் மங்கம்மையாரும் இந்திராகாந்தியம்மையாரும் போன்று சிறந்த தகுதியுடையவராயின், கல்வி கற்ற பெண்டிர் நாடாளவுஞ் செய்யலாம்.

பெரும்பட்டக் கல்விபெற்ற பெண்டிர், ஏதேனும் அலுவல் ஏற்காது தம் கல்வியை இல்லறத்திற்கே பயன்படுத்தினும் இழுக்கில்லை.

பொதுத்தகுதி

தாய்மொழி, ஆங்கிலம் ஆகிய இரண்டும் பிழையறப் பேச எழுதப்படிக்கத் தெரிதல், உடல்நலம், உண்மை, நடுநிலை, நேர்மை, பிறர்நலம் பேணல், சுறுசுறுப்பு, கடமையுணர்ச்சி, ஒழுக்கம் என்பன எல்லாப் பணிகட்கும் பொதுத்தகுதியாம்.

று

முற்கூறியவையெல்லாம் சிறந்த பணியாளர்க்குரிய தகுதி கள். அவையில்லாதவர்க்கெல்லாம், அவரவர் திறமைக்குத் தக்க வாறு இடைத்தரமும் கடைத்தரமுமான பணிகளைத் தரல் வேண்டும். ஒரு குடும்பத்திற் பிறந்த எல்லார்க்கும் எங்ஙனம் திறமைக்குத் தக்க பணியும் தேவைக்குத் தக்க நுகர்ச்சியும் உண்டோ, அங்ஙனமே ஒரு நாட்டிற் பிறந்த எல்லார்க்கும் இருத்தல் வேண்டும். இதுவே பாத்துண்டல் என்னும் வள்ளுவர் கூட்டுடைமை.

பொதுவாக, ஒருவர் அறுபதகவை வரை பணியாற்றலாம். ஆற்றல் குறையின் முன்னும், அது நிறையின் பின்னும், ஓய்வு பெறலாம். ஆராய்ச்சி, ஆசிரியப் பணி முதலியவற்றிற்குப் பட்டறிவு மிகமிக ஆற்றல் பெருகுவதனால், அப் பணியாளர்க் குப் பகரமாகப் பணியாற்றப் பிறரில்லாவிடத்து, இயன்றவரை நீட்டிப்புங் கொடுக்கலாம். ஓய்வகவையைத் தீர்மானிக்கும் அளவையாயிருக்க வேண்டியது, பணித் திறமையேயன்றி அகவை வரம்பன்று.