உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்நாட்டு அரசின் கடமை

மக்கட்டொகை

99

மட்டிற்கு மிஞ்சிய இக்காலத்தில், இளமையர்க்கு வேலைதருமாறு முதுமையரை யெல்லாம் 50ஆம் அல்லது 55ஆம் அகவையில் ஓய்வுபெறுவிப்பது இன்றி யமையாத தெனின், இளமையர்க்கு வேலையில்லாக் குறையை நீக்க, உண்மையான மாற்றாயிருப்பது மக்கட்டொகைக் குறைப்பேயன்றி ஓய்வகவையைத் தாழ்த்துவதன்று. ஒருசிலரை முந்தி ஓய்வு பெறுவிப்பதால், எல்லா இளைஞர்க்கும் வேலை யளித்துவிட முடியாது. மேலும், கட்சித் தலைவர், முதலமைச்சர், தலைமை மந்திரியார், குடியரசுத்தலைவர் ஆகியவர்க்கு அகவை வரம்பில்லை. ஆதலால், சிறப்புத் தகுதிபற்றி ஒரு சிலர்க்கு ஊழிய நீட்டிப்புக் கொடுத்தல் குற்றமாகாது.

இனி, ஓய்வுபெற்றவர் நிலைமையும் கூட்டுடைமை நாட்டில் வருந்துவதற்கில்லை. அவர் இறக்குமளவும் ஓய்வுச் சம்பளம் இருக்கும். அது எய்ப்பில் வைப்புப்போல் உதவும். கடுமையுங் கண்டிப்புமான கட்டாயக் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தினால், இன்னும் பத்தாண்டிற்குள் மக்கட்டொகை யைப் ாதியாகக் குறைத்துவிடலாம். அதன்பின் அச்சம் இல்லை. எல்லாக் குடும்பமும் இருபிள்ளை வரம்புடன் இன்புறும். பிறப்பும் இறப்பும் ஒத்திருக்கும். உலகுள்ளவரை கேடில்லை.

போகா றளவிட்டி தாயினுங் கேடில்லை

ஆகா றகலாக் கடை.

என்று மக்கள் வாழ்விற் குறள் மாறியமையும்.

ஒருவர் தம் பேரப்பிள்ளைகளும் கொட்பேரப் பிள்ளை களும் அவர்கள் வழியினரும் இன்பமாக வாழ விரும்பின், இத் திட்டத்தையே ஊக்குதல் வேண்டும். எதிர்கால மக்கள் வாழ்வைப்பற்றிக் கவலையின்மையாலோ, தேர்தலிற் பெருவாரி மக்கள் நேரியைப் பெறல் வேண்டுமென்றே, கட்டாய மலடாக் கத்தைக் கட்சித்தலைவர் கையாளாதிருக்கலாம். ஆயின், இந் நூற்றாண்டிறுதியிலேயே அதன் தீங்கு வெட்டவெளிச்சமாகி விடும். இன்னும் பத்தாண்டிற்குள் உணவுத்தட்டு நீங்கிவிடு மென்றும், எல்லார்க்கும் வேலை கிடைக்குமென்றும் சொல் வது, எண்ணிச் சொல்லுங் கூற்றன்று. இன்னும் பத்தாண்டு செல்லின், இன்னும் பத்து அல்லது பதினைந்து கோடி மக்கட் டொகை கூடும். அதோடு, பத்திலொரு பங்கு விளைநிலமும் நிலவளமுங் குன்றும். அன்று இற்றை நிலையினுங் கேடாயிருக்கும்.

கட்டாய மலடாக்கம் கடினமானதென்று விலக்குவது, கார மருந்து கடியதென்று கொடிய நோயைப் பெருக்குவது போன்றதே.