உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




100

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை 6. சம்பளத்திட்டம்

1. வாழ்க்கைத் தேவைகள்

இன்றியமையாதவை: மூசுவளி (மூச்சுக் காற்று. உயிர்வளி oxygen), பாதுகாப்பு, நீர், உண்டி, உடை, உறையுள்(வீடு), உடல்நலம்.

வேண்டியவை: தட்டுமுட்டு, தொழிற்கருவி, தொழிற் பயிற்சி, நூற்கல்வி, ஒழுக்கம், வேலைப்பேறு, ஐம்புலவின்பம், ஊர்தி, ஓய்வு, போக்குவரத்து, அணிகலம்.

வேண்டாதன: செல்வப் பெருக்கம், இருப்புப் பணம். ஆண்டி முதல் அரசன்வரை அனைவர்க்கும் அடிப்படைத் தேவைகள் ஒன்றே.

"தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி

வெண்குடை நிழற்றிய வொருமை யோர்க்கும் நடுநாள் யாமத்தும் பகலுந் துஞ்சான்

கடுமாப் பார்க்குங் கல்லா வொருவற்கும்

உண்பது நாழி யுடுப்பவை யிரண்டே

""

(புறம்.189)

ஆதலால், பதவிகட்குச் சம்பளத்திட்ட வகுப்பு கீழிருந்து மேற்செல்ல வேண்டும். மனைவியும் இருபிள்ளைகளுமுள்ள ஓர் ஏவலன் (Peon) குடும்பத்திற்கு, க்காலத்தில் 300 உருபா இல்லாமல் வாழ்க்கை நடத்த முடியாது. ஒரு காவலன் (Constable) நிலைமையும் ஏவலன் நிலைமையை ஒத்ததே. அதற்கு மேற்பட்ட பதவிகட்கெல்லாம் ஐம்பதும் நூறும் இருநூறும் ஐந்நூறும் ஆயிரமுமாக ஐயாயிரம் வரை கூட்டிக்கொண்டே செல்ல வேண்டும். அதற்குமேல் எவர்க்குஞ் சம்பளமிருத்தல் கூடாது.

போர்க்காலத்திலும் பஞ்சக்

காலத்திலும் படிகள் கூட்டப்படின், அவ்விரு நிலைமையும் நீங்கியபின் அவற்றைக் குறைத்துவிடல் வேண்டும். போரும் பஞ்சமும் நீங்கிய பின்னும் விலைவாசி யிறங்காது நிலைத்துவிடின், அப் படிகளைச் சம்பளத்தொடு சேர்த்துவிடல் வேண்டும். விலைவாசி மேலும் ஏறாதவாறு, உண்டாக்கத் தாழிலரையும் வணிகரையுங் கட்டுப்படுத்துவது அரசின் கடமையாகும். பணியாளர்க்கு வேண்டிய கருவிகளையும் தலைமையதிகாரிகட்கு வேண்டிய ஊர்திகளையும் அரசு அளித்தல் வேண்டும்.

ஆராய்ச்சியாளர்க்கு, அமைதியான, தூய காற்றோட்ட முள்ள இடங்களில், தக்க கருவிகளொடு கூடிய செந்தண