உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்நாட்டு அரசின் கடமை

101

நிலைப்பாட்டு (Airconditioned) அறையுள்ள வளமனைகளைக் கட்டித்தரல் வேண்டும்.

மேன்மேலுஞ் சம்பளத்திட்டக் குழுக்கள் அமைக்கப்படா வாறு அரசு எல்லா வழிகளையும் கையாள வேண்டும்.

7. குலவேற்றுமை யொழிப்பு

உலகில் வேறெங்கு மில்லாத ஒரு குமுகாயக் கேடு (Social evil) இங்கு இந்தியாவிலுள்ளது. வேறு எந்நாட்டிலும் எவர் பெயரைக் கேட்பினும், அவர் பெயர் மட்டும் தோன்றும்; இங்கோ ஒரு பெயருடன் ஐயர், ஐயங்கார், ஆச்சாரியார், பிள்ளை, முதலியார், செட்டியார், கவுண்டர், தேவர், நாட்டார், கோனார், மூப்பனார், நாடார், படையாட்சி முதலியவற்றுள் ஒன்றாக ஒரு வாலும் நீளும். இதனால் இந்தியரின் உயர்திணைப் பண்பு குன்றி, இக்கால அறிவியல்களை யெல்லாம் மேனாட் டாரே தோன்றி வளர்க்க வேண்டியதாயிற்று.

பிறவிக்குலத் தோற்றம்

ஆரியப்பூசாரியர் தென்னாடு வருமுன், இந்தியர்க்குள், இடமும் மொழியும் தொழிலும் மதமும்பற்றி யன்றி வேறெவ் வகையிலும் வகுப்பு வேறுபாடிருந்ததில்லை. அந் நால்வகை வேறுபாடும், விருப்பப்படி மாறக்கூடியனவாகவேயன்றி, வாழ்நாள் முழுதும் அல்லது இம்மையும் மறுமையும் தொடர் வனவாக இருந்தவையல்ல.

பொருளிலக்கண நூலார் கல்வி, காவல், வணிகம், உழவு என்னும் நாற்பெருந் தொழிலடிப்படையில், அகப்பொருட் கிளவித் தலைவரை அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்று நால்வகுப்பாராக வகுத்திருந்ததை அடிப்படையாகக் கொண்டு, செம்மை பொன்மை கருமை என்னும் முந்நிறம் பற்றித் தமிழரை அல்லது பழங்குடி மக்களை ஆரியப் பூசாரியர் மூவகுப்பராக வகுத்து, வெண்மை நிறம்பற்றித் தம்மைத் தலைமையாக்கிக் கொண்டனர். நால் வகுப்பிற்கும் நிறம்பற்றி வரணம் என்பதே பெயராயிற்று. ஆரிய மொழியில் அனைத் திந்திய முறையில் நால் வரணமும் பிராமணன் சத்திரியன் வைசியன் சூத்திரன் எனப் பெயர்பெற்றன.

பழங்குடிப் பேதைமை, மதப்பித்தம், கொடைமடம் என்னும் முக்குறை கொண்ட பேதை மூவேந்தரும், ஆரியப் பூசாரியரின் வெண்நிறத்தையும் முன்னோர் மொழியின்

அவர்