உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




102

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

வெடிப்பொலியையுங் கண்டு மருண்டு, அவர் மருட்டினவாறே அவரை நிலத்தேவரென்றும் அவர் முன்னோர் மொழியைத் தேவமொழி யென்றும் நம்பி, அவருக்கடிமையராயினர். "மன்னன் எப்படி மன்னுயிர் அப்படி." கோ எப்படி குடிகள் அப்படி.

வரண அடிப்படையில் அமைந்த குலவகுப்பு, பிறவிப் பிணிப்புங் கொண்டது. ஆரியக் குலவகுப்பு ஏற்பட்டதிலிருந்து உலக முள்ளவரையும், ஒருவன் எத்தொழிலைச் செய்தாலும் அத் தொழில் பற்றிக் குலங் கொள்ளாது, தன் முன்னோன் ஆயிரந் தலைமுறைக்கு முற்பட்ட வரையினும் அவன் தொழில்பற்றியே தன் குலங்கொள்ளல் வேண்டும். கல்வி ஒரு குலத்தார்க்குரிய தன்று. இறைவன் அதை எல்லா வகுப்பார்க்கும் பொதுவாக்கி யிருக்கின்றான். ஒரு பாவலன் அல்லது நூல்வலன் அல்லது புதுப்புனைவாளன் எத்தொழிலாளர் குடும்பத்திலும் தோன்ற லாம். ஆயின், இந்தியாவில், இயற்கைக்கும் இறைவன் ஏற்பாட் டிற்கும் மாறாக, ஆரியப் பூசாரியர் கல்வியைத் தம் குலச்சிறப்புத் தொழிலாகக் கொண்டதனால் அல்லது கூறியதனால், கற்றோர் வகுப்பிற்குரிய பார்ப்பார், அந்தணர் என்னும் பெயர்கள் தமிழ ரிடை வழக்கற்றன.

பார்ப்பான் அல்லது பார்ப்பனன் என்னும் பெயர், பிராமணன் என்பதன் திரிபன்று. 'அனன்' என்பது முக்கால வினைமுற்றிலும் வரக் கூடிய சாரியை.

எ-டு: செய்தனன் செய்கின்றனன் செய்வனன் பார்த்தனன் பார்க்கின்றனன் பார்ப்பனன்

பார்ப்பான் நூல்களைப் பார்ப்பவன், அகக்கண்ணாற் காண்பவன், அறிஞன். Seer என்னும் ஆங்கிலச் சொல்லையும் நோக்குக.

66

66

'கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்.

""

"அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான்.

""

(குறள்.403)

(குறள்.30)

கல்வி போன்றே துறவுநிலையும் எல்லாக் குலத்தார்க்கும் பொதுவாகும். ஆயின், ஆரியப் பூசாரியர் அதைப் பிராமணர்க்கே யுரியதாக்கி, பிராமணன் வாழ்க்கையை மாணவம் (பிரம சரியம்), இல்வாழ்வு (கிருகப் பிரஸ்தம்), காடுறைவு (வானப் பிரஸ்தம்),