உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




104

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

மூவேந்தர் மரபும் அற்றபின் அரசர், வணிகர், வேளாளர் ஆகிய மூவகுப்பாரும் சூத்திரராயினர். ஒருசில வணிகரும் பிறரும் தம்மை ஆரிய இனத்திற் சேர்க்குமாறு பூணூல் அணிந்து கொண்டனரேனும், தமிழரெல்லாம் சூத்திரர் என்னுங் கொள்கை நீங்கியபாடில்லை.

அண்டாதார் வகுப்பைச் சேர்ந்த மள்ளர், பறையர், பறம்பர் (தோல்வினைஞர்) முதலியோர் 'பஞ்சமர்' என்னும் அஞ்சாங்குலத்தா ராயினர். அவர் தமிழர்க்குள்ளும் தீண்டா தார், அண்டாதார், காணாதார் என முத்திறப்பட்டனர்.

பிராமணரல்லாத ஒவ்வொரு குலத்தாரும் தமக்கு மேற்பட்ட குலத்தார்க்கு எத்தனை எட்டுத் (steps) தொலைவில் நிற்கவேண்டு மென்பது, அவ்வம் மேற்குலத்தின் தரத்திற்குத் தக்கவாறு நடை முறையில் வரையறுக்கப்பட்டது. தீண்டாதார் மேல்வகுப்பார் முன் செருப்பணிதல், வல்லவாட்டுப் போடுதல், குடைபிடித்தல் முதலியன விலக்கப்பட்டன. அக்கிராகரம் என்னும் பிராமணர் குடியிருப்பிற்குள் தீண்டாதார் எவ்வகை யிலும் புக முடியாது.

ஆங்கிலராட்சியிலேயே,

நாயக்கர் ஆட்சியிலும் மராட்டியர் ஆட்சியிலும், பிராம ணியம் வலுத்ததனால் குலப்பிரிவினைக் கடுமையும் வலுத்தது. பொதுக்கல்வி, அரசினர் அலுவலகங்களிலும் தொடர்வண்டிகளிலும் குலவேற்றுமை யின்மை, எல்லாக் குலத்தினரும் அரசியல் அலுவலராதல், துணையரையர் (Viceroy) வரை எல்லா ஆங்கில அதிகாரிகட்கும் தீண்டாதாரே சமையற்காரராகவும் பரிமாறிகளாகவும் அமர்தல் முதலிய சூழ்நிலைகளால், குலப் பிரிவினைக் கொடுமை முனைமுறிந்து மேன்மேலும் மழுங்கலாயிற்று.

பிறவிக்குலத் தீமைகள்

1. தமிழரெல்லாரும் ஓரினத்தாரேனும், மணவாமை முதற் காணாமைவரை பற்பல தடைகளாற் சின்னபின்னமாகச் சிதைக்கப்பட்டுப் போனதினால், ஒற்றுமையின்றிச் சில குலங்கள் அடிக்கடி போரிடவும் நிலையாகப் பகைகொள்ளவும் நேர்ந்துள்ளது. இதனால் நாட்டில் அமைதி குன்றியது.

2. தமிழ்மொழிக்கும் இலக்கியத்திற்கும் அயலாரால் நேர்ந்த கேடுகளைத் தடுக்க இனவொற்றுமை யில்லாது போயிற்று.