உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்நாட்டு அரசின் கடமை

105

3. அமைச்சரும் அமர்த்ததிகாரிகளும் தம் குலவெறியால் நடுநிலை திறம்பி, அரசியற் பதவிகட்குத் தகுதிமிக்கவரைத் தள்ளிவிட்டுத் தகுதியற்ற தம் உறவினரையே அல்லது குலத் தாரையே அமர்த்த நேர்கின்றது.

4. மண்ணுலகில் விண்ணுலக வின்பந் துய்க்கத்தக்க காதல் மணங்கள், தடைப்பட்டுச் சாதல்மணங்களாக முடிகின்றன.

5. வளைந்து வளைந்து ஒரே குலத்திற்குள் மணஞ்செய்து வருவதால், மணமக்கட்குப் பிறக்கும் பிள்ளைகள் பெரும்பாலும் மதி விளக்கம் விஞ்சியவரா யிருப்பதில்லை.

நீராவி வலிமையும் மின்னாற்றலுங் கண்டு இற்றை அறிவியல்கட்கும் கம்மியத்திற்கும் அடிகோலிய ஆங்கிலர்க்கு, கெலத்தியர் (Celts), சாகசனியர் (Saxons), தேனியர் (Danes), பிரெஞ் சியர், செருமானியர் முதலிய பல இனத்தாரின் அரத்தக்கலப்புத் துணையாயிருந்ததென்று கொள்ள இடமுண்டு.

உலக முதற்றாய் உயர்தனிச் செம்மொழியும், உலகம் போற்றும் இயலிசை நாடகமும், கணிதம் கணியம் மருத்துவம் மடைநூல் முதலிய எண்ணரிய நுண்ணூலுந் தோற்றுவித்த குமரிநிலத் தமிழரின் வழிவந்தவர், இன்று அறிவு விளக்கமின்றி அடிமையராயிருப்பதற்கு, ஓரினத்துள்ளும் விரிவாக மணவுறவு கொள்ளாது ஒவ்வொரு சிறு குலத்திற்குள்ளேயே கொண்டுங் கொடுத்தும் வருவதே கரணியமாகும்.

பிராமணர் ஒரு குலத்துக்குள்ளேயே உறவு கொண்டும் கல்வியறிவு விஞ்சியுள்ளனரே யெனின், அவர் மூவாயிர மாண்டு கல்வியைக் குலத்தொழிலாகக் கொண்டதனால், கல்விக் கின்றி யமையாத நினைவாற்றலையும் உணர்ச்சி வலிமையையும் பெருக்கிக்கொண்டனர் என்க. மேலும், குருக்கள் போன்ற சில தமிழக் கூட்டத்தார் அவ்வப்போது பிராமணருடன் கலந்து போனதாகவுந் தெரிகின்றது. பேச்சிலும் பழக்கவழக்கத்திலும் பிராமணரைப்போல் நடித்துக்கொண்டும், சில தனிப்பட்ட தமிழர் அவரொடு சேர்ந்திருக்கலாம். இத்தகைய மறைமுகக் கலப்பிற்கு எத்துணையோ வழியுண்டு. ஆயின், ஆரிய வுணர்ச்சி யைப் போற்றிக் காக்கவேண்டு மென்பதே பிராமணர் உயிர்நாடிக் கொள்கை.

அக்கை மகளை மணக்கக்கூடா தென்பதும், சில குலத்தார்க்குள் புறமணப் (exogamous) பிரிவுகளிருப்பதும்,