உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




110

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

உண்கலமேந்தியிரந்து

வாழ்ந்த இரப்போர் வகையர்; இசைபாடியும் அகப்பைக் கின்னரி போன்ற எளிய நரப்புக் கருவி யியக்கியும் இரந்தவர் பாணரெனப்பட்டனர். மொண்டை மண்டை. மொண்டை - மொந்தை. பண் - பாண் - பாணர். பாண் = பாட்டு, இசை.

சக்கிலியர் என்னும் தெலுங்க வகுப்பார் தமிழ் நாட்டிற்கு வந்தபின் பறம்பர் என்னும் தமிழவகுப்பார் மறைந்தனர்.

பறைப்பாணர் மணப்பறையரும் பிணப்பறையரும் என இருவகையர். மேளகாரர் என்னும் இசைவேளாளர் குலந் தோன்றிய பின், பண்டைத் தமிழவகுப்பாரான மணப்பறையர் மறைந்தனர்.

முதற்காலத்தில் பறை யென்பது, மங்கலம் அமங்கலம் என்னும் இரண்டிற்கும் உரிய தோற்கருவிப் பொதுப்பெயர் என்பது,

"தெய்வம் உணாவே மாமரம் புட்பறை'

என்னுந் தொல்காப்பிய அடியால் அறியப்படும்.

(அகத். 18)

கழகக் காலத்தில் ஊனுணவு இழிந்ததாகக் கருதப்பட வில்லை யென்பதை, கீழ்வரும் செய்யுட் பகுதிகள் தெரிவிக்கும்.

"புலவு நாற்றத்த பைந்தடி

பூநாற் றத்த புகைகொளீஇ யூன்றுவை

கறிசோ றுண்டு வருந்துதொழி லல்லது பிறிதுதொழி லறியா வாகலின் நன்றும் மெல்லிய பெரும் தாமே ...........

செருமிகு சேஎய்நிற் பாடுநர் கையே.

இது கபிலர் பாடியது.

66

"என்பொடு தடிபடு வழியெல்லா மெமக்கீயு மன்னே

இது ஒளவையார் பாடியது.

தடி = தசை, சதை.

"மட்டுவாய் திறப்பவு மைவிடை வீழ்ப்பவும்

அட்டான் றானாக் கொழுந்துவை யூன்சோறும்

பெட்டாங் கீயும் பெருவளம் பழுனி

நட்டனை மன்னா.............

""

இதுவுங் கபிலர் பாடியது.

(புறம்.14)

""

(புறம்.235)

(புறம்.113)