உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்நாட்டு அரசின் கடமை

மைவிடை

=

காராட்டுக்கடா (வெள்ளாட்டுக்கடா).

111

இனி, எயினரும் பாணரும் மாட்டிறைச்சி யுண்டதும், இழித்தும் பழித்துங் கூறப்படவில்லை யென்பது,

"எயிற்றியர் அட்ட இன்புளி வெஞ்சோறு தேமா மேனிச் சில்வளை யாயமொடு ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவீர்"

(சிறுபாண். 175-7)

என்பதால் அறியப்படும்.

ஆமான் = காட்டுமாடு.

சமணம் தமிழ்நாட்டிற் புகுந்த பின்னரே இல்லறத் தமிழரும் புலான்மறுத்தலை மேற்கொண்டனர். அதற்குமுன் துறவியரே அவ்வறத்தைக் கடைப்பிடித்தனர்.

அருளறத்தின் மேம்பாட்டினால் விரைந்து பரவிவந்த சமணத்தைத் தடுத்தற்கு, சிவநெறியாரும் அவ்வறத்தை இறுகக் கடைப்பிடிக்க வேண்டிய தாயிற்று. அதனால் ‘சைவம் என்னும் சிவநெறிப் பெயரே மரக்கறி யுணவையுங் குறிக்கத் தலைப்பட்டுவிட்டது. ஊனுணவினர் தாழ்ந்தவராகக் கருதப்பட்டனர். அத் தாழ்வு மாட்டிறைச்சி யுண்பாரை மிகக் கடுமையாய்த் தாக்கிற்று.

பாணர் மாட்டிறைச்சி யுண்டவர். அவர் தொல்வரவு க் குலத்தொழிலோ, ஆண்டிமுதல் அரசன்வரை அனைவர்க்கும் அளவிறந்த இன்ப மூட்டுவதும், பெருமதிப்பிற் குரியதும், இடையறாத நல்வருவாய்க் கிடமானதும், பெண்டிரை மயக்கு வதும், உவளகம் சென்று கோப்பெருந்தேவியின் ஊடலையுந் தணிப்பதுமான இன்னிசைக்கலை. முத்தமிழில் இரண்டாகிய சையையும் நாடகத்தையும் தொன்று தொட்டு வளர்த்து வந்தவர் அவரே.

இசையும் கூத்தும், உண்மையில் வேதமோதுதல் அல்லாத எல்லாத் தொழில்களும், மனுதரும சாத்திரம் முதலிய ஆரியக் குலவொழுக்க நூல்களாற் பிராமணர்க்கு விலக்கப் பட்டிருந்தன வேனும், இசைத்தொழிலின் பெருமையையும் கவர்ச்சியையும் கண்ட தமிழ் நாட்டுப் பிராமணர், கி.மு. சில நூற்றாண்டுகட்கு முன்பே

இசை

யிலக்கணத்தை வடமொழியில் மொழிபெயர்த்துக் கொண்டனர். கி.பி. 2ஆம் நூற்றாண்டில், பிராமணர் பலர் வேதமோதுதலை விட்டுவிட்டு இசைத் தொழிலை மேற் கொண்டு மதுரைக்கு வடக்கில் ஒரு குடியேற்ற நகரை அமைத் திருந்தனர் என்பது,