உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

112

"வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப்

புரிநூன் மார்பர் உறைபதிச் சேர்ந்து

என்னும் சிலப்பதிகார அடிகளால் அறியப்படும்.

(13:38-9)

பாணரை இசைத் தொழிலினின்று விலக்க வழி பார்த்துக் கொண்டிருந்த தமிழ்ப் பகைவர்க்கு, சமணத்தால் விளைந்த ஊனுண விழிவு நல்ல துணையாக வாய்த்தது.

மாணிக்கவாசகர் இயற்றிய திருச்சிற்றம்பலக் கோவையிற் பாணனொடு வெகுளுதல் என்னுந்துறை பற்றிய,

"மைகொண்ட கண்டர் வயல்கொண்ட தில்லைமல்

கூரர்நின்வாய்

மெய்கொண்ட வன்பின ரென்பதென் விள்ளா வருள்பெரியர் வைகொண்ட வூசிகொற் சேரியின் விற்றெம்மில்

வண்ணவண்ணப் பொய்கொண்டு நிற்கலுற் றோபுலை யாத்தின்னி

""

(386)

போந்ததுவே. என்னும் செய்யுளில் வந்துள்ள "புலையாத்தின்னி" என்னும் வசைச் சொல், சமணவரவிற்கு முந்திய காலத்தில் நிகழ்ந்திருக்க முடியாது.

"தோழி தாயே பார்ப்பான் பாங்கன்

பாணன் பாடினி இளையர் விருந்தினர் கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர் யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப

என்பது தொல்காப்பியம்.

99

(கற்பியல்52)

இங்ஙனம் முதன்முதல் தாழ்த்தப்பட்ட தமிழ வகுப்பினர் பாணர். அதற்கடுத்துத் தாழ்த்தப்பட்டவர் பள்ளர் என்னும் மள்ளர். பள்ளர் என்பது உலக வழக்கு. மள்ளர் என்பது செய்யுள் வழக்கு. இருசொற்கும் பள்ளமான மருதநிலத்தில் வாழ்பவர் என்னும் பொருள் ஒன்றே. மறவரை (வீரரை)க் குறிக்கும் மள்ளர் என்னுஞ் சொல் வேறு.

உழுதுண்ணுங்

காராளர் வகுப்பைச் சேர்ந்த மள்ளர் பண்டைக் காலத்தில் இழிவாய்க் கருதப்படவில்லை யென்பது கீழ்வருஞ் செய்திகளால் விளங்கும்.

"நுங்கோ யாரென வினவின் எங்கோக்

களமர்க் கரித்த விளையல் வெங்கள் யாமைப் புழுக்கிற் காமம்வீட வாரா ஆரற் கொழுஞ்சூ டங்கவுள் அடாஅ