உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




116

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

தமிழர் அனைவருள்ளும் ஊனுண்ணாதவர் உயர்ந்தவ ரென்றும் ஊனுண்பாருள் ஆடு கோழி மீன் முட்டை மட்டும் உண்பவர் உயர்ந்தவரென்றும், பன்றியும் நண்டும் உண்பவர் அவரினுந் தாழ்ந்தவரென்றும், மாடு தின்பவர் எல்லாரினுங் கடைப்பட்டவ ரென்றும் எண்ணக் கிடக்கின்றது.

ஐரோப்பியர், அமெரிக்கர், அரபியர், யூதர் ஆகிய அனை வரும் மாட்டிறைச்சி யுண்பவரே. வேதக்காலத்து ஆரியப் பூசாரியரும் அதையுண்டவரே. பாணரைச் சிறக்க உண்பித்தும் அவர்க்குப் பரிசளித்தும் பொற்பூச் சூட்டியும், மூவேந்தரும் போற்றிக் காத்தனர் என்று புறநானூறு பறைசாற்றுகின்றது. இங்ஙனமிருந்தும் அவர் பிற்காலத்துத் தீண்டாதாரான மைக்கும், நந்தனார் போன்றார், சுட்டெரிக்கப் பட்டமைக்கும், ஒரு கூட்டத்தாரின் கட்டுப்பாடான திட்டமே கரணியமா யிருந்திருத்தல் வேண்டும். அத் திட்டத்தைத் தீட்டிய அயலார் ஓரளவு திருந்திவரினும், அவரால் ஏவப் பட்ட தமிழப் பேதையர் அதை நிறைவேற்றுவதிலேயே கண்ணுங் கருத்துமா யிருப்பது, மிகமிகக் கண்டிக்கத்தக்கது.

தாழ்த்தப்பட்டவரை இன்று கடுமையாகத் தாக்கிக் கொண்டிருப்பது தீண்டாமை யொன்றே. அதனாலேயே அவர் பொருளாட்சி நிலைமையும் முன்னேற்றமும் நிலையாகத் தடைப்பட்டுள்ளன. ஒருசிலர் கல்வி கற்றுப் பதவி பெற்றதனால் மட்டும் அவர் நிலைமை திருந்திவிடாது.

நூற்றுக்கணக்கான தலைமுறை நல்லுணவும் நல்லாடையும் நாகரிக வளர்ப்பும் இன்றி, கோடைவெயிலிற் காய்ந்தும் குளிர் பனியில் விறைத்தும், மாடுபோல் உழைத்து மனக்கவலை யால் இளைத்து, துப்புரவில்லாது தோற்றமுங் கெட்டு, தன்மான மும் தன்முயற்சியும் என்னவென்றறியாது வறுமையால் வருந்தி, மேல்வகுப்பாரால் நாயும் பன்றியும் போல் இழிவாகவும் பூச்சியும் புழுவும்போல் எளிமையாக வும் எண்ணப்பட்டிருக்கும் இந் நிலையில், தாழ்த்தப்பட்ட இனம் தகுந்த வழியைக் கடைப் பிடித்தாலன்றி ஆயிரவாண்டுத் திட்டத்தாலும் அணுவளவும் நலம் பெறாது.

முதன் முதலாகச் செய்யவேண்டியது தோற்ற மாற்ற மும் இழிவுணர்ச்சி நீக்கமுமே. மேல்வகுப்பாருள் எத்துணை யோ படிமுறை ஏற்றத் தாழ்விருப்பினும், தாழ்த்தப்பட்டவர் பார்வையும் அவர் குடியிருக்குஞ் சேரியும் காண்பார்க்குக் கண்டமட்டில் ஒரு தனி வேற்றுமைக் காட்சி தோன்றி ஓர்