உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்நாட்டு அரசின் கடமை

117

அருவருப்புணர்ச்சியை உண்டு பண்ணுகின்றது. இந் நிலைமை கல்லாதவர்க்குரியதே. கற்றவர் சின்னஞ் சிறுபான்மை யாராதலால், பென்னம் பெரும்பான்மை அதனால் திருந்தி விடாது. நீண்ட நாளாகவுள்ள அநாகரிக வுடம்பும் உடனே திருந்தி விடாது; நெடுகலுமிருந்த தாழ்வுணர்ச்சியும் திடுமென நீங்கிவிடாது. மேல்வகுப்பானொருவன் கீழ் வகுப்பானொருவனைத் தனக்குச் சமமாக இருக்கையில மர்த்தினும், ஓர் அலுவலகத் தலைவன் முன் ஏவலன் போல அஞ்சிக்கூசுவான் ஆதலால், மனமாற்றம் வேண்டும்.

உண்மையாக

இதற்கு ஏற்றது கல்வி யொன்றே. தாழ்த்தப்பட்டவரை முன்னேற்ற வேண்டுமெனின், செலவைப் பொருட்படுத்தாது ஐந்து அகவை முடிந்த தாழ்த்தப்பட்ட இனப் பிள்ளைகட் கெல்லாம் கட்டாய இலவசக் கல்வியளித்தல் வேண்டும். இலவசக் கல்வியில் இலவசவுடை யும் சேரும். அதற்குச் செல்வர் உதவுதல் வேண்டும். பிள்ளைப் பருவத்திலேயே எல்லாப் பிள்ளைகளும் கூடிப்பழகின் குலவேற்றுமையுணர்ச்சி தோன்றாது. பிள்ளைப்பருவ நட்பும் இறுதிவரை தொடரும். நாள்தொறுங் குளித்து நல்லுடையணிந்து எண்ணெய் தேய்த்துத் தலை சீவித் துப்புரவான இடத்திலேயே உட்காரும் நாகரிகப் பழக்கம், மெல்ல மெல்ல நல்ல தோற்றத்தை யுண்டுபண்ணும்.

ஒரு தோட்டியின் பிள்ளையைப் பிறந்தவுடன் ஒரு வெள்ளாளன் அல்லது பிராமணன் வீட்டில் வளரவிடின், அப் பிள்ளை வளர்ந்த பின் நல்ல தோற்றங் கொண்டிருக்கும். இதற்கு மாறாக வெள்ளாள அல்லது பிராமணக் குழந்தையை ஒரு தோட்டி வீட்டில் விடின், தோட்டிக் கோலமே கொண்டு வளரும். ஆதலால் தொடர்ந்து பத்தாண்டுக் கல்வியளிப்பின், ஒரே தலைமுறையில் தாழ்த்தப்பட்ட வகுப்பார் எல்லோரை யும் நாகரிகராக மாற்றிவிடலாம்.

1

நாடார், படையாட்சியர் (பள்ளியர்), இடையர், மறவர், உடையார் முதலிய தீண்டும் வகுப்பார் பலரும், வெயிலிற் காயினும் வயல்வேலை செய்யினும், துப்புரவாயிருப்பதால் தோற்றங் கெடாதுள்ளனர். அங்ஙனமே, தீண்டாதாரும் துப்புரவாயிருப்பின் தோற்றங் கெடாதிருப்பர்.

கல்வியினால் அறிவும், துப்புரவும் தன்மானமும் துணிவும் பெற்றபின், ஒருவனுக்குத் தாழ்வுணர்ச்சியிராது. எட்டிநில் என்று எவனும் சொல்லவும் மாட்டான் . எந்தத்