உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்நாட்டு அரசின் கடமை

119

மகன் பிரிந்துபோய்த் தானே பொருள் தேடி வாழ்தல் வேண்டும். மகளும் அத்தகையோன் ஒருவனொடு கூடிவாழ்தல் வேண்டும். அங்ஙனமே ஒரு குறித்த கால எல்லைவரைதான் அரசும் உதவமுடியும். அதன்பின் தாழ்த்தப்பட்டவர் தாமே தம்மைக் கவனித்துக்கொள்ளல் வேண்டும்.

அரசு செய்ய வேண்டியதெல்லாம் மானத்தொடு தன் முயற்சியால் வாழ்வதற்குத் தடையாயுள்ள இழிவை வேர றுப்பதே.

யாதொரு கட்டுப்பாடுங் கரணியமுமின்றிக் கொத்தடி மையுங் குலவடிமையுமாய், எந்த மேல்வகுப்புச் சிறுவனுஞ் சிறுமியுங்கூட அதிகாரத்தொடு நில் என்றால் நிற்கவும், சொல் என்றாற் சொல்லவும், வா என்றால் வரவும், போ என்றாற் போகவும், செய் என்றாற் செய்யவும், வை என்றால் வைக்கவும், முள்வழியுஞ் சுள் (சுடு) வழியுஞ் செருப்பின்றி நடக்கவும், கோடை வெயிற்குங் கொடுமழைக்குங் குடை பிடியா திருக்கவும், விழா நாளும் வெயில்நாளுஞ் சட்டை யின்றித் திரியவும், காட்டுக் கிணற்றில் நீரெடுத்துக் கானாற்றிற் குளிக்கவும், காலமெல்லாம் பாடுபட்டுங் கைப் பொருளின்றியிருக்கவும், பண்ணையாரைக் காணுங்காற் பதைபதைத்துக் கைகட்டி வாய்புதைத்து உளமொடுங்கி உடல் நடுங்கித் திணறவும், கூலியையுயர்த்தச் சொல்லின் சுட்டெரிக்கப்படவும் தாழ்த்தப்பட்ட மக்கள் அன் முறையாய் அடக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் உள்ள நிலையில் இந்தியாவை ஓர் உரிமை நாடென்று எவருங் கூறவொண்ணுமோ?

கால்

பேராயம் (Congress) ஆட்சியேற்று இன் று நூற்றாண்டிற்கு மேலாகியும் தாழ்த்தப்பட்டவர் நிலைமை திருந்தவில்லை. உயர் வகுப்பாரும் இடைவகுப்பாரும் போலத் தாழ்வகுப்பாரும் பல குலத்தார் என்பதை அரசு இன்னும் அறியவில்லை. ஒரு தாழ்த்தப்பட்ட குலத்தார்க்கு இன்னொரு தாழ்த்தப்பட்ட குலத்தார்மேல் தம் குலத்தார் மேலுள்ள அளவு பற்றிருத்தல் இயலாது. ஆதலால் பள்ளர், பறையர், பறம்பர் (சக்கிலியர்) ஆகிய முக்குலத்தார்க்கும் வெவ்வேறு அமைச்சர் இருத்தல் வேண்டும். மேல் (தலை), நடு (இடை), கீழ்

(கடை)என்னும் முத்திற வகுப்பாருள், மேல்வகுப்பாரும் நடுவகுப்பாரும் தத்தம் வகுப்பைச் சேர்ந்த பிற குலத்தாருடன் உண்பர். ஆயின் பள்ளர் பறையரின் வீட்டிலும், பறையர் பறம்பரின் வீட்டிலும் உண்பதில்லை. இதற்குத் தொழில்