உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




120

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

வேற்றுமையும் ஊண் வேற் றுமையும் மொழி வேற்றுமையும் கரணியமாகும். சில இடங் களில் ரு குலத்தாரிடைத் தொல்வரவான பகைமையுமுண்டு.

இனித் தோட்டி வேலை செய்யும் பறம்பரின் தீண்டா மையைப் போக்க நகரங்களில் நரகலெடுக்கும் வேலையை அறவே நீக்கல் வேண்டும். எடுப்புச் சலக்கப்புரைகளை யெல்லாம் அடிப்புச் சலக்கப்புரைகளாக மாற்றுதலும் வேண்டும். பழைய துப்புரவுநிலை நிலவ வேண்டுமெனின் மக்கட்டொகைக் குறைப்பும் இன்றியமையாததாகும்.

இன்னோரன்ன சீர்திருத்தங்களைச் செய்து தாழ்த்தப் பட்டோரை உயர்த்தாவிடின் அமெரிக்காவிலும் தென்னாப் பிரிக்காவிலும் கருப்பருக்குச் செய்யப்படுங் கொடுமையைக் கண்டிக்க இந்திய அரசிற்கும் அரசியற் கட்சிகட்கும் எள்ளளவுந் தகுதியில்லை.

இனி மதமாற்றத்தினால் தாழ்த்தப்பட்டோரின் தாழ்வு நீங்கும் என்று கருதுவதும் தவறாகும். மலையாள நாட்டில் நாயாடிகள் சிலர் முகமதியரான பின்பும் 'தொப்பியிட்ட நாயாடிகள்' என்னும் பெயரே பெற்றனர். ஆதலால், பழைய கருப்பன் கருப்பனே. நடுவணரசின் வலிமையாலும் கட்டாயக் கல்வித்திட்டத்தாலும் நாடு முழுதுமுள்ள குமுகாயம் (சமுதாயம்) சீர்திருந்தினாலன்றி, வேறெவ் வகையாலும் தாழ்த்தப்பட்டோர் நிலைமை திருந்த வழி யில்லை. சிலர் மதமாறி நெருப்பவிந்தது மன்றி வாய்த்தவிடும் போனது போலத் தாழ்வு நீங்காததுடன் தமக்கிருந்த சிறப்புச் சலுகையையும் இழந்துள்ளனர். ஆதலால் மறுமை நன்மை நோக்கியன்றி மதமாறுதல் தகாது.

நடுவணரசு தீண்டாதாரின் தீழ்ப்புத் தீர்தலின் சடுத்தத்தை (urgency) யுணர்ந்து, பத்தாண்டு இலவசக் கட்டாயக் கல்வித் திட்டத்தை உடனே புகுத்தல் வேண்டும். தேர்தல் வெற்றி நோக்கிப் பண்ணையார் வகுப்பின் உதவி வேண்டி இதைக் கடத்திவைப்பின், இது கூட்டுடைமை யாட்சியாலன்றித் தனியுடைமை யாட்சியால் இயலாதென்ற முடிபிற்கே வருதல் வேண்டும்.

நால் வரணக் குழப்பம்

ஆரியர் கி.மு. 2000 போல் இந்தியாவிற்குட் புகுந்த போது பெருங்கூட்டமாயிருந்தனரென்றும் தொழில் பற்றிப் பிராமணர்,