உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்நாட்டு அரசின் கடமை

ம்

123

தனிப்பட்டவனாவான்; அதோடு தமிழால் தலைமையான வனும் ஆவான். ஆதலால் இடைக்காலத்தில் ஏற்பட்ட இழிவுணர்ச்சியை உதறித் தள்ளிவிட்டு ஏக்கழுத்தங் கொண்டு ஏறுபோற் பீடுநடையிடுக. தமிழன் எவனுக்கும் பிறப்பால் தாழ்ந்தவனல்லன்.

8. மதுவிலக்கு

மதுவிலக்கு நல்லதே. ஆயின் அதற்கும் சில விலக்குண்டு. உழைப்பாளி,பிள்ளை பெற்ற பெண்டு, நோயாளி, அயல் நாட்டார் ஆகியோர்க்கு மது மிகத் தேவையானதே.

சென்னைத் துறைமுகத்தினின்று பெரும் பொறையாக இரும்பேற்றப்பட்ட ஒரு வண்டியை, குளித்ததுபோல் அல்லது மழையில் நனைந்ததுபோல் உடம்பு தோன்றுமாறு வேர்வை யொழுக ஈருழைப்பாளிகள் மயிலைக்கு இழுத்துச் சென்றபின் அவருடம்பு வலி, பிள்ளை பெற்ற பெண்டின் உடம்புவலியை ஒத்திருக்கின்றது. இதை யறிந்தே இரு வலியையும் 'லேபர்' (labour) என்னும் ஒரு சொல்லாற் குறிக்கின்றனர் ஆங்கிலர். இவ்விரு வலியும் முந்திரிச் சாராயத் தினாலன்றிக் குளம்பி நீராலும் (coffee) கொழுந்து நீராலும் (tea) தீரா. முந்திரிச் சாராயம்-brandy.

ரு

நோயாளியையும் அயல்நாட்டாரையும் பற்றிச் சொல்ல வேண்டுவதில்லை. அயல்நாட்டாரால் அரசிற்கு நல்ல வருவாயு

முண்டு.

கிறித்தவ ஊழியருள் தலைசிறந்தவரான திருப்பவுல் (St.Paul) தீமோத்தேயுவிற்கு எழுதிய முதல் திருமுகத்தில் (5:23) "நீ அடிக்கடி நோய்ப்படுவதால் தண்ணீரை மட்டுங் குடியாதே. உன் செரிமானத்திற்கு உதவுமாறு சிறிது முந்திரிச் சாற்றையும் (wine) சேர்த்துக்கொள்" என்று அறிவுரை கூறியிருப்பது கவனிக்கத் தக்கது.

1854-க்கும் 1862-க்கும் இடையில் மலேயத் தீவுக் கணத்தைத் துருவி உயிரினங்களை ஆய்ந்த உவாலேசு (Alfred Russel Wallace), ஒருமுறை அவர் சென்ற படகு கடற் கொந்தளிப் பில் அகப்பட்டுக் கொண்டபோது, அவர் கொடுத்த மது வருந்திப் படகோட்டியர் ஊக்கமாய்த் தண்டு வலித்ததனால் ஏமமாய்க் கரைசேர்ந்தனரென்று கூறியிருக்கின்றார்.

மதுவை அளவாக வுண்டாற் கேடு செய்யாதென்று தெரிகின்றது.