உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




124

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

கோடைக்காலத்திற் கிடைக்குங் குளிர்ந்த பனங் கள்ளும், மாரிக்காலத்திற் கிடைக்கும் வெப்பமான தென்னங் கள்ளும் எளிய உழைப்பாளிக்கு இறைவன் அளித்த குடிப்பா என்று ஆராய்தல் வேண்டும்.

மதுவைக் கல்லா மாந்தர் மட்டுமன்றிப் பல்கலைக் கழகத் துணை வேய்ந்தரும் உயரறமன்றத் தீர்ப்பாளருமாகிய கற்றோரும் அருந்துகின்றனர். அம்பகம் (permit) பெறாமை யாலோ வேண்டாமையாலோ ஒருவர் மதுவருந்தலை விட்டு விட்டாரென்று கருத முடியாது. மறைவாக அருந்தப் வழிகளுண்டு.

பல

மதுவை விலக்கின் எல்லா நாடுகளிலும் என்றைக்கும் விலக்குதல் வேண்டும். ஒரு நாட்டில் மட்டும் விலக்குவதும் விலக்கின நாட்டிலும் ஆட்சி மாறியபின் மீண்டும் புகுத்து வதும் கூடா.

மதுவிலக்கை நிறைவேற்றும் காவல் துறையினர் உண்மையும் ஊக்கமும் இறுதிவரை கடைப்பிடிக்கும் உறுதியும் உள்ள வரா? டையில் ஊக்கந் தளர்பவரா? அல்லது கடமைக்குப் பணியாற்றுபவரா? கள்விலைஞரொடு கள்ளக் கூட்டாயிருப் பவரா? மதுவிலக்கு மீறிகள் தொகை வரவரக் குறைகின்றதா? கூடுகின்றதா? அல்லது அப்படியே யி ருக்கின்றதா? நச்சு மதுவுண்டு சாதல் தொடர்கின்றதா? நின்றுவிட்டதா? என்று இன்னோரன்ன பலவற்றையும் ஆய்ந்து தொழிலாளர் வகுப்பின் கருத்தெடுத்து, பெரும் பாலார் மதுவை, விரும்பின் எல்லா நாட்டு மதுக்களையும் வருவித்து ஆழ்ந்த ஆராய்ச்சி செய்து மனமயக்கமும் நரம்புத் தளர்ச்சியுமின்றி உழைப்பு வலியைத் தீர்ப்பதும் உடம்பிற்கு நல்வலுவைத் தருவதும் நறுமணமும் இன்சுவையும் உள்ளது மான மதுவை அரசே ஆங்காங்குத் தொழிற்சாலைகளில் உருவாக்கி அளவாக நேர்மையான விலைக்கு விற்பின் தொழிலாளர்க்குப் பெருநன்மையாம்; அரசிற்குந் தொல்லை

யில்லை.

در

"முட்டிக்கள் ளென்ப முதுபனை தெங்கீந் தங்கள்ளே புட்டிக்கள் ளென்ப பிராந்தி விசுக்கி பீர்சின்னாம் சட்டிக்கள் ளென்ப காப்பி கொக்கோ தேயிலையாம் பெட்டிக்கள் ளென்ப பீடி சிகரெட் பெருஞ்சுருட்டே

""

பண்டித மாசிலாமணி நாடார்