உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்நாட்டு அரசின் கடமை

133

இதுவரை நிலநடுக்க மில்லாவிடினும் தாம்பரம் பாங்கரில் நிலவதிர்ச்சி தோன்றியிருப்பதால், கீழ்நிலப் பாதைகளும் அளவாகவே அமைதல் வேண்டும். கடல் கொந்தளித்து அலை கரைமீறினும் இடுக்கண் நேரும்.

மாநகரிடையிடையே மூச்சுப்பை (lungs) போன்றுள்ள இடைவெளிகளை என்றும் போற்றிக் காத்தல் வேண்டும்.

ஆடகவெளியில் (Gymkhana ground) படைத்துறை யலுவலகம் அமைவதும் தவறே.

பழைய பச்சையப்பன் கல்லூரிக் கட்டடத்தின்முன் இருந்த ஆடிட வெளியில், செவிலிகள் விடுதியைக் கட்டக் கூடாதென்று, அக் கல்லூரிப் பள்ளித் தலைமையாசிரியர் தடுத்தும், அரசு பொருட்படுத்தவில்லை.

மாநகர் விரிய விரிய மக்களியக்கமும் வணிகப் போக்குவரத் தும் அஞ்சத்தக்க அளவில் மிகுந்து வருகின்றன. இந் நிலையில், ஒவ்வொரு முச்சந்தியிலும் நாற்சந்தியிலும் அரசியற் கட்சித் தலைவர் படிமைகளைப் போட்டியிட்டு நிறுவிவருவது மிகக் கேடான செய்தியாகும். ஒருவர் படிமையை ஓரிடத்தில் அமைத்தாலும் போதும். ஒரே நகரில் அல்லது ஒரே சாலையிற் பல இடத்தில் நிறுவுவது நன்றன்று. நாளடைவில் அவை பல்கிப் போக்குவரத்திற்கு முட்டுக் கட்டைகளாகிப் பெருஞ்சேதத்தை யுண்டுபண்ணும். பின்னர் நீலன் படிமைக்கு நிகழ்ந்தது நேரும். சாலைகளும் வழிகளும் அல்லாத கட்டடப் பரம்பு (compound) மூலைகட்குள் படிமை களை நிறுவுவதே நல்லது. ஒவ்வொரு முதலமைச்சர்க்கும் ம் படிமை நிறுவுவதும், ஒருவர் வாழ்நாட் காலத்திலேயே படிமை நிறுவுவதும் தவறாகும். செங்கோன் மைக்குச் சிறந்த அரசர், ஆபிரகாம் லிங்கன் போன்ற அவ்வந் நாட்டுக் குடியரசுத்தலைவர், இராசாராம் மோகன்ராய் போன்ற நாட்டுத் தொண்டர். டி. மாதவன் நாயர் போன்ற கட்சித் தலைவர், சர்ச்சில் போன்ற அவ்வந் நாட்டுத் தலைமை மந்திரியார், எடிசன் போன்ற புதுப்புனைவாளர், கால்டுவெல் போன்ற மொழி மொழி நூலாராய்ச்சியாளர், பி.தி. சீநிவாச ஐயங்கார் போன்ற வரலாற்றாசிரியர், மறைமலையடிகள் போன்ற தமிழ்ப்புலவர் முதலியோர்க்கே படிமைகள் நிறுவுதல் வேண்டும்.

உருவந் தெரியாத திருவள்ளுவர் போன்ற உலகப் பொதுப் பேரறிஞர்க்கு, ஒவ்வொரு நாட்டிலும் படிமை நிறுவாது