உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




134

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

நினைவுச் சின்னமே நிறுவுதல் வேண்டும்; அல்லது மாபெரு மணி மண்டபமே எழுப்புதல் வேண்டும்.

னிமேல் எவ்வகையிலும் சென்னை மக்கட்டொகை மிகாதவாறு, குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை இறுகக் கடைப் பிடித்தல் வேண்டும்.

19. காடுவளர்ப்பு

காடுவளர்ப்பென்பது, ஆண்டுதோறும் நடுவண் அரசு கொண்டாடி வரும் மரநட்டு விழாவன்று. இதனால் அருகி லுள்ள மக்கட்கு நிழலேயன்றி வேறொரு பயனும் விளையாது. வானளாவ ஓங்கி வளரும் மரங்கள் நெருங்கிச் செடிகொடி களொடு பின்னிப் பிணைந்து மக்களும் பெரு விலங்குகளும் ஊடுருவிச் செல்ல முடியாவாறு இடைவெளி யொடுங்கியி ருண்டு, ஒரே நிலைத்திணைத் தொகுதியாக இருப்பதே, மழைவளந் தரும் காடாம்.

குடமலைத் தொடர்களில் குளம்பித் தோட்டங்களும் கொழுந்துத் தோட்டங்களும் மேலைக் காய்கறித் தோட்டங் களும், ஏராளமான காட்டைக் கெடுத்துள்ளன. இனிமேலுங் கடாதவாறு காடுகளைப் போற்றிக் காத்தல் வேண்டும்.

இன்றியமையாது குடியிருக்க வேண்டிய மக்களைத் தவிர ஏனையோரையெல்லாம், மலைநகர்களினின்று இறக்கிவிடல் வேண்டும். கீழ்வெளி நிலவூர்கள் போல மேன்மலைகளிலும் குடியிருப்புகள் இருத்தல் கூடாது.

பட்டுப்போன கிளைகளையும் மரங்களையு மன்றிப் பச்சை மரங்களை வெட்டி விறகெரிக்கவிடல் கூடாது. விறகு வணிகர், மரக்கரிக்காக ஆண்டுதொறும் மிகுதியாக வேனிற் காலங்களில் மலங்காடுகளை எரித்துவிடுகின்றனர். இதை அடவித்துறையார் (Forest Dept.) அறவே தடுத்தல் வேண்டும். மரங்கள் வெட்டப் பட்ட அல்லது எரிக்கப்பட்ட இடங்களி லெல்லாம் மீண்டும் மரங்களும் காடுகளும் வளரவிடுதல் வேண்டும். 'சவுக்கு' என்னும் காற்றாடி மரங்களை மட்டும் வரிசை வரிசையாகக் கீழ்வெளி நிலங்களிற்போல் நட்டு விட்டாற் போதாது. பழைய இயற்கைக் காடுகளையுஞ் சோலைகளையும் வளரவிடுதல் வேண்டும்.

சில வணிகருஞ் செல்வரும் ஏர்க்காடு, கோடைக்கானல் முதலிய மலைநகர்களில் மரங்களோடு கூடிய வீடுகளையும்