உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்நாட்டு அரசின் கடமை

135

வளமனைகளையும் விலைக்கு வாங்கி, மரங்களை வெட்டி விற்றுவிடுகின்றனர். அரசு அதைத் தடுத்தல் வேண்டும்; அல்லது தானே அவ் விடங்களை விலைக்கு வாங்கிவிடல் வேண்டும்.

மழை குடிநீருங் குளிநீருந் தருவதுடன் மின்னாக்கத் திற்குந் துணையாயிருப்பதனால், மழையைப் பெருக்கும் மலங்காடுகள் அழியாது காத்தல் வேண்டும்.

தச்சுமரத்திற்கும் விறகிற்கும் மலைமரங்களை வெட்டு வது இன்றியமையாததெனின், மக்கட்டொகையைக் கடுத்தும் கடுமையாகவும் குறைப்பதே தக்க மருந்தாம்.

20. தேர்தல்முறை

முற்கூறியவாறு, குறைந்த பக்கம் நூற்றிற் கெழுபத்தைவர் தாய்மொழியில் எழுதப்படிக்கத் தெரியாத நாட்டிற் குடியரசு நிகழ முடியாது.

நேரியிடுபவர், 20 அகவைக்குக் குறையாதவராகவும், தம் பகுத்தறிவினால் சட்டசவை யுறுப்பினராகத் தகுந்தவரைத் தாமே தீர்மானிக்கும் திறமையராகவும், இருத்தல் வேண்டும். சட்டசவை வேட்பாளர், 25 அகவைக்குக் குறையாதவராகவும், பள்ளியிறுதிக் கல்வியேனும் கற்றவராகவும், நாட்டிற்கு நன்மை தருந் திட்டங்களை

வேண்டும்.

அறியக்கூடியவராகவும் இருத்தல்

அமைச்சர் ஒவ்வொருவரும் 30 அகவைக்குக் குறையாத வராகவும், அவரவர் வாரியத்திற்குரிய அறிவும் ஆராய்ச்சியும் ஆற்றலும் வாய்ந்தவராகவும், பட்டக்கல்வி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்.

கல்வியமைச்சர் பள்ளியிலுங் கல்லூரியிலும் ஆசிரியப் பணி யாற்றியவராகவும், நாட்டுமக்கள் வரலாற்றையும் மொழி வரலாற்றையும் இலக்கிய வரலாற்றையும் மதவரலாற்றையும் அரசியல் வரலாற்றையும் அறிந்தவராகவும்; பணத்துறை யமைச்சர் கணிதம், வணிகக்கல்வி, வைப்பகக் கல்வி (Banking), பொருளாட்சிக் கல்வி ஆகிய நான்குங் கற்றவராகவும், நேர்மையுள்ள வராகவும்; மருத்துவ அமைச்சர், மருத்துவப் பட்டம் பெற்ற வராகவும் மருத்துவப் பயிற்சியுள்ளவராகவும்; இங்ஙனமே பிற அமைச்சரும் தத்தம் துறைப் பட்டமும் பயிற்சியும் பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்.