உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




136

பெற்றவராகவும்,

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

தமிழ்ப்புலமை

முதலமைச்சர் 40 அகவைக்குக் குறையாதவராகவும், பட்டம் யில்லாவிடினும் பற்றுள்ளவராகவும், எல்லாத் துறையும்பற்றிய பொது அறிவுள் ளவராகவும், நடுவுநிலை, நேர்மை, சூழ்ச்சிவன்மை, துணிவாற்றல், மனத்திடம், ஊக்கம், ஈகத்தன்மை முதலிய பண்புடையவராயும்,

66

“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்(து) அதனை அவன்கண் விடல்

""

(குறள்.517)

என்னும் நெறிமுறையைக் கடைப்பிடிப்பவராகவும் இருத்தல் வேண்டும். அல்லாக்கால், ஆட்டச்சீட்டை அடிக்கடி குலுக்கு வது போலும், சீதை நகைகளைக் கண்டெடுத்ததாகச் சொல்லப் படும் குரங்குகள் அவற்றை இடமாற்றியணிந்தது போலும், அமைச்சர் வாரியங்களை அடிக்கடி மாற்றவும், வாரியங் களைத் தகாதவரிடம் ஒப்படைக்கவும் நேரும்.

ஒரு கட்சிச்சார்பில் நின்று தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர், கட்சிமாறின் தம் தகுதியை இழந்துவிடுவதால், மீண்டும் தேர்தலில் நின்று வெற்றிபெறும்வரை அரசினால் விலக்கிவைக்கப்படல் வேண்டும்.

மும்முறைக்குமேற் கட்சிமாறுபவரை நிலையாகச் சட்ட

சவை யினின்று விலக்குதல் வேண்டும்.