உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




154

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

சில குறிப்புப் பெயரெச்சங்கள்

தமிழ் உசர்ந்த

கடு

சிட்டு

தண்

படு (பெரிய)

இந்தி

ஊஞ்சா

கடா

சோட்டா

தண்டா

படா (b)

இந்தியின் இலக்கண ஒழுங்கின்மை

1. சில நிலைமைகளில் சொற்களின் ஈற்றிலும் அசைகளின் ஈற்றிலும் வரும் அகரம் ஊமையெழுத்தாகும். ஆயின், இது செய்யுளொப்பிப்பிற் கவனிக்கப்படுவதில்லை; பிறமொழிச் சொற்கட்கும் ஏற்காது.

2. சமற்கிருதத்திற் போன்று இந்தியிலும் சொற்களின் பால், பொருள் நோக்கிய இயற்கைப் பாலன்றி ஈறு நோக்கிய இலக் கணப் பால். அதுவும் ஒழுங்கானதன்று. 'இ', 'ஈ' யில் முடியும் சொற்கள் பெண்பால் என்னும் நெறியீட்டிற்கு விலக்காக,கீ (gh) (நெய்), தஹீ (தயிர்), பாணீ (நீர்), மோத்தீ (முத்து) என்பன ஆண்பால்.

3. இறந்தகாலச் செயப்படுபொருள் குன்றா வினையின் எழுவாய் 'நே' என்னும் சாரியை பெறல் வேண்டும். அவ்வினை எழுவாய்க்கேற்ப முடியாது செயப்படுபொருட்கேற்பவே முடிதல் வேண்டும். செயப்படு பொருள் தொகினும், 'கோ' என்னும் வேற்றுமையுருபொடு கூடினும், அவ்வினை எழுவாயையும் செயப்படுபொருளையும் நோக்காது என்றும் படர்க்கை யொருமை வினையாகவே யிருக்கும்.

ஆங்கிலத்திலும் ஒழுங்கின்மையிருப்பினும், அது ஒலி முறை யொன்றே பற்றியது. இந்தியில் ஒலிமுறை, பால்முறை, வினைமுடிபு முறை ஆகிய மூவகையில் ஒழுங்கின்மையுள்ளது. இந்தி நாட்டில் அல்லது இந்தி மக்களொடு குடியிருந்து, பிள்ளைப் பருவத்திலேயே கேள்விமுறையிற் பயின்றாலன்றி, பையற் பருவத்திலும் பின்பும் கல்வி முறையில் அயலார் பயின்று இந்தியில் தேர்ச்சி பெறுவது அரிதாகும். இந்தி மக்களொடு போட்டியிடுவது அதினும் அரிதாகும்.

இந்தியா தெற்கில் ஒடுங்கியும் வடக்கில் அகன்றும் உள்ளது. பல்லாயிரக்கணக்கான இந்திமக்கள் வேலையில்லா