உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்நாட்டு அரசின் தனிக்கடமை

155

திருக்கின்றனர். ஆதலால், தென்னாட்டார் இந்தி கற்பினும் தன்னாட்டிலன்றி வட நாட்டில் வேலைபெற முடியாது. வளிநாட்டில் வேலைபெற முடியாமையைச்

வேண்டு வதில்லை.

வழங்

சால்ல

ம்

இந்தியினுஞ் சிறந்த மொழிகள் தென்னாட்டில் ங்கும் ம் போதும், ஒப்புயர்வற்ற ற உலக அறிவியன் மொழியாகிய ஆங்கிலம் இந்திய ரெல்லார்க்கும் பொதுவாயிருக்கும்போதும், இக்கால இலக்கியமில்லாததும், லக்கண வொழுங்கில்லா ததும், தேவையில்லாததும், பயன்படாததும், ஆங்கிலத்தினும் அயலானதும், திரவிட மொழிகளைத் தாழ்த்துவதுமான இந்தியைக் கற்பதற்கு,

ந்தி வறியர் மிகுந்த நடுவணரசின் அடாச் செருக்கும் தென்னாட்டுப் பேராயக் கட்சியாரின் காட்டிக்கொடுப்புமன்றி, வேறு கரணியமில்லை. இந்தி இந்தியப் பெரும்பான்மை மொழியென்று சொல்லப்படு கின்றது. அது உண்மையாய்த் தோன்றவில்லை. திரவிட மொழிகள் போலப் பல ன மொழிகளை களை ஒன்றாக்கிச் சொல்வதுபோல் தெரிகின்றது. உண்மையில் பெரும்பான்மை மொழியாயிருப்பினும், பெரும்பான்மை யொன்றே அதை இந்தியப் பொதுமொழி அல்லது ஆட்சிமொழியாதற்குத் தகுதிப்படுத்தி விடாது. அது பெரும்பான்மையாக விருப்பத னால், அதைக் கற்கும் அயலாரின் முயற்சி அல்லது வருத்தம் குன்றிவிடாது. மேலும், ஆட்சி மொழியாதற்குத் தகுதி இலக்கியச் சிறப்பேயன்றிப் பேசுவாரின் தொகையன்று. பேசுவாரின் தொகையே அளவையாயின், பேசப்படாத சமற்கிருதத்திற்கு 8ஆம் பட்டியலில் இடமில்லை. அது வடஇந்தியத்

க்

தாய்மொழியென்னும் வழூஉக் கருத்தினாலேயே சிறப்புப் பெற்றிருக்கின்றது. மொழியின் சிறப்பை நோக்கின், செம்மொழி பேசும் சிறுபான்மையரைப் பொற் காசுகள் போன்றும், சிறுமொழி பேசும் பெரும்பான்மையரைப் புதுச்சல்லிகள் (நயே பைசே) போன்றும், மதிப்பிடல் வேண்டும்.

இந்தி இந்திய வொற்றுமையை யுண்டாக்குமென்றும் அடிக்கடி சொல்லப்படுகின்றது. அது பிரிவினையையே யுண்டாக்கு மென்பது இன்றே தெரிகின்றது.

பொதுமக்கள் நூற்றிற் கெழுபதின்மர் கல்லா மக்களா யிருப்பதால் இந்தியால் நாளடைவில் தமிழ் கெடும் என்பது