உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்நாட்டு அரசின் தனிக்கடமை

163

கொண்டும், நடுவணரசு சன்னஞ் சன்னமாக இந்தியைத் திணித்து வருவது, வாய்மையும் நடுநிலைமையும் நேர்மையு மாகாது.

11. திட்டவட்டமான நிலைத்த முடிபு

மதுவிலக்குத் திட்டம் ஆட்சிதோறும் மாறிக்கொண்டு வருவது போன்று, ஆட்சிமொழித் திட்டமும் அடிக்கடி மாறலாகாது.

கட்சிவெறி மிக்குத் தாய்மொழிப் பற்றற்ற தமிழ்நாட்டுப் பேராயக் கட்சியார் தமிழின் இயல்பை அறியாமையால், ஆட்சிமொழிபற்றி அவர் கூறுங் கூற்று செல்லாது. ஒரு வீட்டுத் தலைவன் கையெழுத்து ஓர் எழுத்தீட்டிற்கு வேண்டும் போது, அவன் மக்களான சிறுபிள்ளைகளிடம் மட்டும் கையெழுத்து வாங்கிப் பயனில்லை. தமிழுக்கு அதிகாரிகள் மறைமலையடி களும் சோமசுந்தர பாரதியாரும் போன்றாரே.

பல்லாயிரக் கணக்கினர் இந்தியைக் கற்பினும், எங்கே வேலை கிடைக்காமற் போய்விடுமோ என்றஞ்சியே யன்றிப் பற்றுவைத்துக் கற்கவில்லை.

ஒருவருக்குத் தேவையாயிருப்பின், எந்த மொழியும் எத்தனை மொழியும் கற்கலாம். மணிமேகலை காலத்து ஆதிரை கணவன் சாதுவன் அந்தமான் மொழி கற்றிருந்ததனால் உயிர் தப்பினான். தமிழர்க்கு இந்தியைவிட அக்கம்பக்கத்திலுள்ள தெலுங்குங் கன்னடமும் மலையாளமுமே பயன்படும்.

நேரு உறுதிமொழி ஆங்கில நீட்டிப்பு என்றன்றி ஆங்கில நிலைப்பு என்றே மாற்றப்படல் வேண்டும்.

தமிழ்நாட்டு இந்தியெதிர்ப்புப் போராட்டம் தமிழ் அல்லது தமிழர் விடுதலைப் போராட்டமே. இந்தியெதிர்ப்பு மறவர் பேராய ஈகியர்க்கு (தியாகிகட்கு) இம்மியுந் தாழ்ந்த வரல்லர். ஆதலால், அவர்க்கு நிறுத்தப்பட்ட உதவித்தொகை பின்னோக்கிய விளைவொடு (Retrospective effect) கொடுக்கப் படல் வேண்டும்.

தக்கண இந்திபரப்பற் சவையால் (தக்ஷிண பாரத இந்திப் பிரச்சார் சபாவினால்) தமிழுக்குத் தீங்கு நேரின், அது தடுக்கப்படல் வேண்டும்.

ஏற்கெனவே வடமொழியாற் பெருங் கேடடைந்துள்ள தமிழை இந்தியும் தாக்கின், எரிக்கும் நெருப்பொடு காற்றுங் கூடியது போலாகும்.