உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




164

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

மொழித்துறையில் தாய்நாட்டுத் தமிழரின் நிலை இலங்கைத் தமிழரையும் தாக்கியுள்ளது. இந்தி வெறியும் சிங்கள வெறியும் ஒன்றே. தமிழ் இந்தியாவில் ஆரியத்தினின்று மீட்கப் படின், இலங்கையிலும் சிங்களத்தினின்று மீட்கப்படும்.

ஆங்கிலம் நீங்கின், மீளா அடிமைத்தனமும் தீரா மடமை யும் நேரும்.

குமரிநாட்டுத் தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமாகும் என்னும் உண்மையை நாட்டி, தமிழைக் காத்தல் தமிழ் நாட்டு அரசின் தலையாய கடமையாம்.

12. கட்சித் தலைவர் கல்வித்துறையில் தலையிடாமை

கல்வியுங் கல்விவாயிலான மொழியும், கட்சிச் சார்பற்று எல்லார்க்கும் பொதுவானவை. ஆதலால், (மக்கள் நன்மை யையும் நாட்டு முன்னேற்றத்தையும் கருதும்) கட்சிச் சார்பற்ற கல்வியாளரே, எல்லார்க்கும் பொதுவான கீழ்க்கல்வியையும் கல்வித் தொழிலாளர்க்குச் சிறப்பாக வுரிய மேற்கல்வியையும், கவனித்தல் வேண்டும்.

ஆங்கில ராட்சிக்காலத்தில், துவக்கப் பள்ளி, நடுத்திறப் பள்ளி உயர்நிலைப் பள்ளி, பயிற்சிப் பள்ளி என்னும் நால் வகைக் கல்வியகங்களிற் கீழ்க்கல்வியும், கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் என்னும் இருவகைக் கல்வி நிலையங்களில் மேற்கல்வியும், சிறந்த முறையிற் கற்பிக்கப்பட்டன. நடுத்திறப் பள்ளிக்கல்வி, தொழிலாளர்க்குப் பயன்படும் வகையில் உயர்நிலைத் லைத் துவக்க (Higher Elementary) கல்வியென்றும், மேற்கல்விக்குப் பயன்படும் வகையில் கீழ்நிலை வழிமுறைக் (Lower Secondary) கல்வியென்றும், இருதிறப் பட்டிருந்தது. கல்லூரிக் கல்வி, முதற்கலைஞர் (F.A.), இளங் கலைஞர் (B.A.), சிறப்பிளங் கலைஞர் (B.A. Hons.), முதுகலைஞர் (M.A.), கற்பிப் புரிமையர் (LT) என்னும் ஐவகைக் கடவைகளைக் (Courses) கொண்டிருந்தது. மேற்கலைப் புகவு (Matriculation) என்னும் உயர்நிலைக் பள்ளிக் கல்வி கல்லூரிக் கல்விக்கே வாயில் போன்றிருந்ததனால், பணித்துறைக்கும் பயன்படுமாறு பள்ளியிறுதி (School Final) அல்லது வழிமுறைக் கல்வித் தகுதித்தாள் (S.S.L.C.) என்னுங் கடவை தோற்றுவிக்கப் பட்டது. முதற்கலை (F.A.)யென்பது பட்டக் கடவையாயிராது. இடை நடு (Intermediate) என்னும் இடைநிலைக் கடவையாக மாற்றப் பட்டது.