உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




166

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

மருந்துப் பெயர்களையும் உடனே மொழிபெயர்க்க முடியாது. சில பொறுப்பற்ற தமிழர், ஆங்கிலச் சொற்களை அப்படியே வைத்துக்கொள்ளலாமென்றும், சப்பானியர் அங்ங னமே செய்கின்றனரென்றும், தனித்தமிழைப் புறக்கணித்து விட்டு அறிவியல் தமிழையே கையாள வேண்டுமென்றும் அலப் புவர். அவர் தமிழியல்பைச் சற்றும் அறியார். தமிழ் ஒப்புயர்வற்ற உலக முதற்றாய் உயர்தனிச் செம்மொழியா யினும், தன்னந் தனியான தூய மெல்லியன் மொழியென் பதையும், வல்லோசைப் பிறமொழிச் சொற்களை வரைதுறையின்றிக் கலப்பின்

நாளடைவில் தமிழ் தமிழா யிராது மலையாளம்போல் வேறொரு திரவிட மொழியாகிவிடு மென்பதையும் அறிதல் வேண்டும். தூய்மை யொன்றே தமிழின் உயிர்நாடி. அதனாலேயே அது இன்றும் இளமையோடிருந்து வருகின்றது. கொடுந் தமிழல்லாத செந் தமிழே தமிழ். ஆகவே, தமிழை வளர்ப்ப தாகவும் வளம்படுத்து வதாகவுஞ் சொல்லிக் கொண்டு பிறமொழிச் சொற்களை மொழிபெயர்க்காது வரிபெயர்ப் பாகவோ ஒலிபெயர்ப்பாகவோ தமிழில் வழங்கு பவர்

பகைவரேயாவர்.

தமிழ்ப்

சிலர், இற்றைக் கல்வி ஆங்கிலர் தம் ஆட்சிக்குப் பணியா ளரைப் பயிற்றுமாறு அமைத்த தென்றும், அது இக்காலத்திற் கும் இந்தியாவிற்கும் ஏற்காதென்றும், பித்தர் போற் பிதற்றுவர். ஆங்கிலர் அமைத்த கல்வி அவராட்சிக்குப் பயன்பட்டதொடு, அவரை யகற்றவும் பயன்பட்டு, இன்றும் என்றும் இந்தியர்க்குச் சிறந்த அறிவூட்டுவதாயும், அவரை எல்லாப் பணிக்குந் தகுதிப் படுத்துவதாயும் உள்ளது.

உலக

ஆங்கிலம் அறிவியன் மொழியாயிருப்பதுடன் மொழி யாகவும் இருப்பதால், அதனைப்போல் இந்தியாவிற்கு உதவக் கூடிய அயன்மொழி வேறொன்றுமில்லை. நாமாக வருந்தித் தேடிக் கண்டுபிடித்துக் கற்கவேண்டிய ஓர் அரும் பெருமொழி, தானாக வந்து இந்திய ஆட்சிமொழியாக அமைந்தது, இறைவன் பேரருளும் ஆங்கிலர் பெருங்கொடையு மாகும். “வலிய வந்தாற் கிழவி” என்பது போலாயிற்று.

இயன்றவரை ஆங்கிலம் தாய்மொழி ஆகிய இரு மொழி யும், இயலாத நிலையில் ஆங்கிலந் தனியாகவும், கல்விவாயிலா கவுமிருத்தல் வேண்டும். ஆங்கில வாயிலாகவே இந்தியர் சிறப் பாகத் தமிழர், முன்னேற முடியும். ஆங்கிலத்தைப் புறக்கணிப்ப வரெல்லாம் தம் தலையில் மண்ணை வாரிப்போட்டுக் கொள் பவரேயாவர். கல்வித் துறையிலும் மொழித் துறையிலும், இராசாராம் மோகன்ராயையே முற்றும் பின்பற்றுதல் வேண்டும்.