உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்நாட்டு அரசின் தனிக்கடமை

167

ஏனையுறுப்பு நாடுகளில்லாத தமிழாரியப் போராட் டமும் இந்தி யெதிர்ப்பும் இங்குத் தமிழ்நாட்டிலிருப்பதால், இங்குள்ளவரும் இல்லாதவருமான ஆள்நரும் அமைச்சரும் தம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்டு, தமிழர் மும்மொழித் திட்டத்தை யேற்கவேண்டுமென்றும் சமற்

கிருதத்தைக் கற்க வேண்டுமென்றும் பொதுக் கூட்டங்களிற் சொல்வதும், கட்சித்தலைவர் கல்வித்துறையில் தலையிடுவதே யாகும். தமிழுக்கும் தமிழர்க்கும் மாறான கூற்றுகளை மறுக்கத் தக்க அறிவு வாய்ந்தவர் தமிழாசிரியரே யாதலின், அவர் அதிகாரிகட்கஞ்சி அமைந்திருக்கும்போது, தம் கூற்றிற்கு எதிர்ப்பில்லை யென்று அதிகாரிகள் கருதுவது தவறாகும்.

66

13. தமிழர் யார்?

'உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா உடன்பிறந்தே கொல்லும் பிணிகள் உடன்பிறவா மாமலையி லுள்ள மருந்தே பிணிதீர்க்கு

ஆமருந்து போல்வாரு முண்டு.

""

தமிழர் என்பார் தமிழைப் பேணுவாரே.

66

99

(மூதுரை, 20)

வாண்

'சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்பலத்துமென் சிந்தை யுள்ளும் உறைவான் உயர்மதிற் உயர்மதிற் கூடலினாய்ந்த டீந்தமிழ்' என்று பாடிய மாணிக்கவாசகரும், தம் கல்லறையில் 'தமிழ் மாணவன்' என்று பெயர்பொறிக்கச் சொன்ன (G.U.) போப்பையரும், தென்னாடே தமிழன் தோன்றகமும் மாந்தன் பிறந்தகமும் என்று நாட்டின (P.T.) சீநிவாச ஐயங்காரும், (V.R.) இராமச்சந்திர தீட்சிதரும், தமிழினின்றே சமற்கிருதம் தோன்றியதென்று நடுநிலையாய் ஆய்ந்து கூறிய மேனாள் தமிழ்நாட்டு ஆள்நராகிய (K.K.) சாவும், உண்மையான தமிழரே.

தமிழ்நாட்டிற் பிறந்து தமிழரென்று பெயர் தாங்கினும், வடமொழியில் வழிபாட்டை விரும்புபவரும், இந்தியை இந்தியப் பொதுமொழியாக ஏற்பவரும், தமிழர் முன்னேற்றத் திட்டங்களைத் தடுப்பவரும் தமிழராகார். ஆதலால், தமிழ் நாட்டு மக்களைத் தமிழர்-தமிழரல்லாதார் என்றல்லாது பிராமணர்-பிராமணரல்லாதார் என்று பகுத்தல் தவறாகும். எந்த நாட்டிலும் மக்களின் இரட்டைப் பகுப்பில் (dichotomy) உள்நாட்டாரையே முதற்குறித்தல் காண்க.

இனி, உண்மைத் தமிழரும் தம் முன்னோர் வழியைக் குறிக்க விரும்பின், கன்னடத்தமிழர், குசராத்தித் தமிழர், ஆங்கிலத்தமிழர் என்று குறிக்கலாம். அவர் அடைமொழித் தமிழராவர்; இடைக்கோடிட்ட அமெரிக்கர் (hyphenated Americans) போல்வர்.