உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4

நடுவணரசின் கடமை

1. உலகக் கட்சிகள்

அமெரிக்க அ

அணிநாடுகள்

என்றும், இரசிய அணிநாடுகள் என்றும், அணிசேரா நாடுகள் (Non-aligned Nations) அல்லது 3ஆம் உலகம் (Third World) என்றும், மூவேறு கட்சிகள் உலக நாடுகளினிடையே தோன்றியுள்ளன. இறுதிக்கட்சியில் இந்தியா தலைமை தாங்கியுள்ளது. அது கரடி வந்தால் எல்லாரும் என்மேல் விழுந்துவிடுங்கள் என்று சொல்லும் முறையைத் தழுவியதே.

ரசியாவும் அறிவியல் கம்மியத் துறைகளில் முன்னேறி யிருப்பினும், அவற்றில் தலைசிறந்ததும் உலகச் செட்டி நாடா யிருப்பதும், அமெரிக்காவேயென்பது உலகறிந்தது. அமெரிக் காவைப் போல் திங்களையடையும் நிலைமையில் வேறெந்த நாடும் இல்லை. அமெரிக்கா என்பது பொதுவாக வட அமெரிக்க ஒன்றிய நாடுகளையே (U.S.A.) குறிக்கும்.

பட

எவ்வகைத் தேவையிலும் துன்பத்திலும், இந்தியாவுட் எல்லா வளர்நாடுகளும் (Developing Countries) ஈரணிநாடுகளி னின்றே உதவி பெறுவதால், அணிசேரா நாடுகள் என்பது ஓரணியைச் சேராமல் ஈரணியையுஞ் சேரும் நாடுகள் என்றே நடைமுறையிற் பொருள்படும்.

இனி, சீனந் தலையெடுப்பின், மேலும் ஓர் அணி தோன்ற லாம்.

ஒன்றிய நாட்டினங்கள்' (UN) தோன்றியது, உலகம் ஒன்று படுவதற்கே யன்றி வேறுபடுவதற்கன்று. ஆதலால், ஈரணிகளும் ம் பிணங்கும்போதும் ம் நெறிதவறும்போதும், அவற்றைக் கடிந்து கொண்டு ஒற்றுமைக்கான வழிகளையே ஏனை நாடுகள் மேற்கொள்ள வேண்டும்.