உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நடுவணரசின் கடமை

2. பிறவிக்குலப் பிரிவு

169

நரவூனுண்ணும் காட்டுவிலங்காண்டி நாட்டிலுமில்லா ததும், உலக முதல் நாகரிக இனத்தை அஃறிணையினும் ம் இழிவுபடுத்தியதும், இந்திய முன்னேற்றத்திற்கு மூவாயிரம் ஆண்டாக முட்டுக்கட்டையிட்டு வருவதும், விண்ணுலகிலுங் காணரிய விழுமிய தமிழிலக்கியத்தை அடியோடழித்ததும், மக்களை இம்மையும் மறுமையுந் தாக்குவதும், எல்லாம் வல்ல இறைவனும் மாற்றரிய வரலாற்று மறையை இன்றும் மறைப் பதும், கடுமையிலுங் கொடுமையிலும் ஈடிணையற்றது மான இந்தியக் குமுகாயப் புற்றுநோய், பிறவிக்குலப் பிரிவினையே. கொடுமையாகவும்

இந்தியரை அன்முறையாகவும் அடக்கியாண்டதாக ஆங்கிலர்மேற் குறைகூறும் பேராயக் கட்சியும், இன்று ஒருசார் இந்தியரை அவரினுங் கேடாக அடக்கியாள்வதும், இந்தியரையெல்லாம் குலப் பிரிவினையாற் பிரித்தாள்வதும், தென்னாப்பிரிக்கத் தனி முன்னேற்ற (Apartheid) ஆட்சியும் தோற்றோடு மளவு கொடிதாகும்.

ன்று

ஆங்கிலர் நீங்கி இன்

ம்

கால்நூற்றாண்டாயினும், இன்னும் இக் குமுகாயப் புற்றுநோய் நீங்கியபாடில்லை. ஏதேனுமோ ரளவு நலம் பிறந்திருப்பின், அதுவும் ஆங்கிலர் காலத்தில் அவரால் உண்டானதே.

குலவேற்றுமையும்

வகுப்புவேற்றுமையு

மில்லாத

முகாயத்தைத் தோற்றுவிக்க வேண்டுமென்று சொல்லிக் கொண்டு, பொதுத் தேர்தலிலும் கிளைத்தேர்தலிலும் குலப் பிரிவினையொட்டியே வேட்பாளரை நிறுத்துவதும், உணர்ச்சி மிக்க ஒருமைப்பாட்டு மன்று (Council for Emotional Integration) என்று பெயரிட்டுக்கொண்டு சர்மா, வர்மா, ஐயர், ரெட்டி என்று குலப்பட்டம் விரும்பிகளையே உறுப்பினராக் குவதும், மதுவிலக்கு மன்றத்தாரே விருந்தினர்க்கு மது படைப்ப தொக்கும்.

பேராயக் கட்சியாரும் அரசியல் வினைஞரும் குலப் பட்டம் வழங்குதல் கூடாதென்று, கண்டிப்பான உத்தரவிடல் வேண்டும்.

அரசியற் கணக்கேடுகளிலும் பதிவேடுகளிலும் குலம் பற்றிய குறிப்பேயிருத்தல் கூடாது.

குலவடிப்படைக் குடிமதிப்பை (Census) நீக்கிவிட்டு, உடனே தொழிலடிப்படைக் குடிமதிப்பே தொகுத்தல் வேண்டும்.