உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




170

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

அரசினர் விருந்துகளிலெல்லாம், குலம்பற்றிய எவ்வகை யுணர்ச்சிக்கும் இடந்தருதல் கூடாது.

துப்புரவு, ஒழுக்கம், கல்வி, செல்வம், பதவி, அதிகாரம், அறிவு, ஆற்றல் முதலியவற்றாலன்றிப் பிறப்பால் ஒருவர்க்கும் ஒரு சிறப்பும் இருத்தல் கூடாது. ஐரோப்பிய நாடுகளிற் போன்றே மக்கள் ஓரினமாய் வாழ்தல் வேண்டும்.

3. கல்வியும் ஆட்சிமொழியும்

உறுப்பு நாடுதொறும் மக்கள் மொழியாலு ம் மதத்தாலும் பழக்க வழக்கங்களாலும் வேறுபட்டிருப்பதால், கல்விப் பொருட்டுறை, உடனொத்த பட்டியலில் (Concurrent list) இராது நாட்டுப் பட்டியலிலேயே இருத்தல் வேண்டும்.

இற்றைக் கல்வியெல்லாம் அறிவியலும் கம்மியமுமாக இருப்பதனாலும், இவை மேனாடுகளிலேயே தோன்றி வளர்ந்து வருவதனாலும், இவற்றைச் சிறப்பாகவும் எளிதாக வும் நாம் கற்கக்கூடிய மொழி ஆங்கிலமேயாதலாலும், ந்தியடிகளும் ம் நேருவும் இந்தியாவில்

நன்மையே

யன்றி

மட்டுமன் இங்கிலாந் திலும் ஆங்கில வாயிற் கல்வி கற்றதனாலேயே அவர் நிலைமை யடைந்தனராதலாலும், ஆங்கிலத்தினால் அளவிறந்த இம்மியுந் தீமையில்லையாதலாலும், இந்தியா அதன் வாயிலாகவே முன்னேறவியலுமாதலாலும், நடுவணரசு கல்வியும் அடிமுதல் முடிவரை ஆங்கிலத்திலேயேயிருத்தல் வேண்டும்.

யா

ஆ ங்கிலத்திலுள்ள அறிவுநூல்களெல்லாம் இந்திய வெங்கும் விலைக்குக் கிடைத்தல் வேண்டும்.

ஆங்கில எழுத்தொலியும் சொற்பொருளும் சொற்றொட ரமைப்பும்பற்றி இந்திய ஆங்கிலப் பேராசிரியர் அடிக்கடி கருத்து வேறுபடுவதால், இந்தியப் பல்கலைக்கழகங்களி லெல்லாம் ஆக்கசு போர்டுப் பல்கலைக்கழகம் விடுக்கும் ஆங்கிலேய ஆங்கிலப் பேராசிரியரை ஆங்கிலத்துறைத் தலைவராக அமர்த்துதல் நன்றாம்.

ஆட்சி மொழி

ஆ ங்கிலத்தின் தனிப்பெருஞ் சிறப்பும் இன்றியமை யாமையும் முன்னரே கூறப்பட்டுவிட்டன. ஆங்கிலத்தை யகற்றி அதன் இடத்தில் இந்தியைப் புகுத்துவதற்கு யாதொரு தகுதியும் கரணியமுமில்லை. ஆயினும், இந்தி வெறியர்,