உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நடுவணரசின் கடமை

171

"வலிமைக்கு வழக்கில்லை

99

என்னும் முறையில், ஓநாய் ஆட்டுக்குட்டிக்குச் சொன்னதாகக் கதை கூறுவது போன்ற குற்றங்குறைகளை ஆங்கிலத்தின் மீதும் இந்தியெதிர்ப்பார் மீதும் சுமத்துவது எள்ளிநகையாடத் தக்கதே.

மொழியென்பது ஓர் இனத்தாரின் கருத்து அல்லது அறிவுத் தொகுதியே யென்பது, முன்னரே கூறப்பட்டுவிட்டது. பல்லாண்டு ஆங்கிலம் பயின்று வேண்டிய அறிவெல்லாம் பெற்றுக் கொண்டும், அதை நாள்தொறும் தன் வாழ்க்கைக்கும் வாழ்விற்கும் முழுப் பயன்படுத்திக்கொண்டும் “நான் ஆங்கிலம் வேண்டேன்" என்றும், “இனி ஆங்கிலம் பேசேன்" என்றும் கூறுவது, அறியாமையும் நன்றிக் கேடும் ஏமாற்றுமே யாகும்.

னி

ஒருவன் அன்றுண்டதை அரைமணிக்குள் அல்லது ஒரு மணிக்குள் தன் வயிற்றினின்று வெளியேற்றலாம், ஆயின், குழந்தைப் பருவத்திலிருந்து உண்டு பெற்ற உடம்பு வளர்ச்சி யையும் அதன் வலுவையும் நீக்க முடியாது. அங்ஙனமே பல்லாண்டு ஆங்கில நூல்கள் கற்றுப் பெருவளர்ச்சியும் வலிமை யும் பெற்ற மதியை மயக்கம், பித்தம், சாவு என்னும் மூன்றினா லன்றி வேறெவ்வகையிலும் மாற்ற முடியாது.

அறிவு புறக்கண்ணிற்குப் புலனாகாத அகக்கரணவாற்ற லாதலாலும், மொழியியல்பை ஆராய்ச்சியில்லார் அறியாமை யாலும், பல நடுவண் மந்திரிமாரும் தம் ஆங்கில அறிவை இந்தி வாயிலாக மறைக்கப் பார்க்கின்றனர்.

இனிப் புறவகையிலும், ஆங்கிலப் பகைவருட்பட இந்திய ரனைவரும் ஆங்கில வாழ்க்கையே வாழ்வது வெளிப்படை. முடி திருத்தம், உடைவகை, உண்முறை, குடிப்பு, காலை மாலைச் சிற்றுண்டி, போக்குவரத்து, பல்துறைக் கல்வி, கருவி, தொழின் முறை, வணிகமுறை, விளையாட்டு, மருத்துவம், ஆட்சிமுறை, சட்டசவை பாராளுமன்ற அமைப்பும் நடப்பும், காவலர் பயிற்சி, படைப்பயிற்சி, கூட்டியம் (Band) முதலிய பல்வேறு வேத்தியல் வினைகளும் பொதுவியல் வினைகளும் ஆங்கிலரைப் பின் பற்றியே இந்தியாவில் நடைபெற்று வருகின்றன.

மாணவரும் பெரியோரும் விளையாடும் விளையாட்டுக ளெல்லாம் ஆங்கிலர் விளையாட்டுகளே. விளையாட்டுப் பந்தயச் செய்திகளையே, தலைமைச் செய்தித்தாள்களெல்லாம் பற்பல பக்கம் வெளியிடுகின்றன.