உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நடுவணரசின் கடமை

173

துறை' (Indian Department) என்றும், பெயரிட்டு, ஓர் ஆங்கிலப் பரிமாறியின் (English butler) ஆட்சியின்கீழ் ஆங்கிலப் பணியாளரையே (English servants) அமர்த்தி, பிள்ளைகளுக்கு ஆங்கிலங் கற்பிக்க ஓர் ஆங்கில ஆசிரியையையும் (English govern- ess) ஏற்படுத்தியிருந்தார். அதனால், சவகர்லால் நேரு ஓர் ஆங்கிலப் பிள்ளைபோன்றே வளர்ந்தார்.

மோத்திலால் நேருவிற்கு ஆள்வினைத் துறையிலிருந்த பல ஆங்கில அலுவலர் நெருங்கிய நண்பர். அவர் மாலை தொறும் வந்து நேருவின் தந்தையாரொடு பந்தாடுவர். வேறு வேளைகளிற் சில ஆங்கில நண்பர் உரையாடவும் வருவர். நேரு இல்லத்தில் ஓர் ஆங்கில நூலகமும் இருந்தது. இவையெல்லாம், அவர் இங்கிலாந்திற்குக் கல்விகற்கச் செல்லுமுன்னரே, அவரை நாட்டுப்பற்றுத் தவிர, மற்றவற்றிலெல்லாம் ஓர் ஆங்கில மகனாக்கிவிட்டன. இங்கிலாந்தில் 7ஆண்டு வாழ்க்கையும் கல்வியும், அவர் இந்தியாவின் முதல் தலைமை மந்திரியாரா தற்கு அவரை முற்றுந் தகுதிப்படுத்தி விட்டன.

நேரு என்பது குடும்பப் பெயர். சவகர்லால் என்பதே அவர் தந்தையார் இட்ட பெயர். இருநூறு ஆண்டுகட்கும் முன்பு, 'ராஜ்கால்' என்னும் காசுமீரப் பிராமணப் பண்டிதர், சமற்கிருதமும் பாரசீகமுங் கற்றவர், தில்லிப் பேரரையரைக் கண்டு அவர் அளித்த ஒரு கால்வாயோர நிலத்தில் வதிந்தா ரென்றும், அதனால் நஹர் (கால்வாய்)க் கால் (Kaul) என்று பெயர் பெற்றார் என்றும், 'நஹர்' என்பது நாளடைவில் நேரு எனத் திரிந்த தென்றும் சொல்லப்படுகின்றது. நேருவின் பாட்டனாரான கங்காதர் (கங்காதரர்) நேரு தில்லியின் காவல் தலைவராய் (கொத்வால்) இருந்தார். அவருடைய 3ஆம் மகனாரான மோத்திலாலைப் போன்றே, முதலிரு புதல்வரும் ஆங்கிலம் நன்கு கற்றிருந்தனர். ஆகவே, மூன்று தலை முறையாக ஆங்கிலங் கற்றுவந்த சரவடியில் தோன்றியவர் இந்திராகாந்தி யம்மையார் அதனாலும், சுவிட்சர்லாந்துக் கல்வியாலும், தந்தையாரிடம் பெற்ற பயிற்சியினாலும், பெண்டிர் ஆடவரொடு இன்னும் சமன்மை பெறாத இந்தியா வில், தந்தையார் பதவியைப் பெறவும் அதைத் திறம்படத் தாங்கவும் நேர்ந்துள்ளது. ஆங்கில அறிவு ஒன்றுமட்டும் இன்றேல், அம்மையார் இந்தியத் தலைமை மந்திரியாராகி யிருக்க முடியாது. இதையுணர்ந்தே அவரும் தம் தந்தையார்