உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




174

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

போல் இந்தியை இந்திய ஆட்சி மொழியாக்குவதில் எச்சரிக்கை யாயிருந்து வருகின்றார். ஆயினும், இந்தி வெறியாரின் துடுக்காலும் ஒட்டாரத்தாலும், இந்தியின் அடர்ந் தேற்றத்தைத் தடுக்கவும் இயலவில்லை.

இங்ஙனம் பேரளவு நடுநிலையும் பகுத்தறிவுமுள்ள

தலைமை மந்திரியாரும் இந்திவெறியர்க்கு அஞ்சி அடிபணியக் கரணியம், தேர்தல் தோல்வியச்சம் ஒன்றே. இந்தி வெறியரின் ஒட்டாரத்திற்குக் கரணியம், தென்னாட்டுப் பேராயத்தாரின் அடிமைத்தனம் ஒன்றே. இக்காலத்திற்கேற்றதும் இன்றியமை யாததுமான அறிவியற் கல்வி இந்தியிலின்மையும் ஆங்கிலத் திலேயே யுண்மையும் வெள்ளிடை மலையாய் விளங்கித் தோன்றும்போது தென்னாட்டார் ஏன் மதியையும் மானத்தையு மிழந்து ஆங்கிலத்தையகற்றி இந்தியை ஏற்க வேண்டும்? மேலும், இந்தி நாட்டிலன்றித் தம் நாட்டிலேயே வேலை பெறுதற்கு ஏன் இந்தியைக் கற்க வேண்டும்?

அக்கம் பக்கத்திலும் இனமொழிகளொடு இல்லாத தொடர்பு, ஆயிரத்தைந்நூறு கல் தொலைவிற் கப்பாற்பட்ட அயன்மொழியொடு தென்னாட்டு மொழிகட்கு என்ன ஏற்பட்டுள்ளது? ஆங்கிலர் வருமுன் இத் தொடர்பு இருந்ததா? வந்தபின்பேனும் அவர் காலத்தில் இருந்ததா? அல்லது இந்திய விடுதலைப் போராட்டக் காலத்திலேனும் ஏற்பட்டதா? இனி, தென்னாட்டார் இந்தியை ஆட்சிமொழியாக ஏற்றுக் கொண் டால் தான் விடுதலையளிப்போமென்று, ஆங்கிலர் என்றேனும் சொன்னதுண்டா? திடுமென்று 1950-ல், இராசேந்திரப் பிரசாதின் சூழ்ச்சியினால் மட்டும் இந்திய வடகோடி மொழிக்கும் தென்கோடி மொழிக்கும் எங்ஙனம் தொடர்பு ஏற்பட்டுவிடும்?

ஆங்கிலந் தேவையில்லையென்றும் இந்தி போது மென்றும் கொள்ளும் நிலைமையிருப்பின், விடுதலை பெற்ற வுடன் ஏன் ஆங்கிலத்தை அடியோடகற்றிவிட்டு இந்தியை இந்திய ஒரு தனியாட்சி மொழியாக ஏற்படுத்தவில்லை? இந்தியரை அடிமைப்படுத்திக் கொடுமையாக ஆண்ட ஆங்கில ரொடு ஏன் மீண்டும் தொடர்பு கொள்ளவேண்டும்? இன்றே னும், ஏற்கெனவே பெற்ற ஆங்கில அறிவையும் அதனாலடைந்த ஆற்றலையும் அகற்ற முடியாதெனினும், ஆங்கிலப் பேச்சையும் எழுத்தையு மேனும் இந்திவெறியர் உடனே நிறுத்திவிட முடியுமா?