உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




176

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

நாட்டரசு ஏற்று நடத்தும் நிலைமையில்லாவிடத்து, நடுவண ரசே ஏற்று நடத்துதல் வேண்டும்.

பல்கலைக்கழக நல்கைக் குழு (U.G.C.) வகுத்த சம்பளத் திட்டப்படியே, எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரி களிலும் வழங்கப்படல் வேண்டும். அது தவறின், நடுவணரசு தலையிட்டுத் திருத்துதல் வேண்டும்.

5. ஆசிரியப் பதவி வேறுபாடும் பெயர் வேறுபாடும்

கல்லூரியாசிரியர்களுள், திருத்தாளர் (Tutor), விரிவுரை யாளர்(Lecturer), உதவிப் பேராசிரியர் அல்லது துணைப்பேரா சிரியர் (Reader, Asst. Professor), பேராசிரியர் (Professor) என நால்வகை வேறு பாடிருப்பது நன்றே. திருத்தாளர் புதிதாகப் பட்டம் பெற்ற மாணவராயிருக்கலாம். விரிவுரையாளர் நல்ல புலமையராகவும் சொற்பொழிவாற்றலராகவும் இருத்தல் வேண்டும். அவரினும் பரந்த கல்வியரே உதவிப் பேராசிரியரா யிருத்தல் கூடும். பேராசிரியரோ பரந்த கல்வியரும் சிறந்த ஆராய்ச்சியாளரும் ம் நீண்ட பட்டறிவுடையருமாயிருத்தல் வேண்டும்.

தகுதி மிகுந்த திருத்தாளர்க்குச் சம்பளத்தை யுயர்த்தலாம். ஆயின், திருத்தாளர் பதவியும் விரிவுரையாளர் பதவியும் சமமாகிவிட முடியாது.

பதவிப்

னி, பேராசிரியர் என்பது ஒரு கல்லூரியாசிரியப் பெயராயிருப்பதால், உயர்நிலைப் பள்ளியாசிரியரைப் பேராசிரியர் என்று குறிப்பதும் தவறு. அறிவாற்றல் மிக்கவ ராயின், பெரும் புலவர் என்றோ ஆசிரியமணியென்றோ பிறவாறோ குறிக்கலாம்.

6. வரவுசெலவுத் திட்டம்

ஒரு புதிய நாடாயின், பட்டறிவின்மையால் ஆண்டு தோறும் புதுவரியிடலாம்; ஒரு செல்வ நாடாயின், சிறந்த பணிசெய்ய மேன்மேலும் புதுப்புது வரியிடலாம்; இந்தியா போன்ற எளிய நாட்டில் ஏற்கெனவே வரிப்பளு மிகுந்திருக்கும் போது, மேன்மேலும் வரி சுமத்துவது சரியன்று. வரிமிகையும் விலைவாசியுயர்விற்கு ஒரு கரணியம் என்பதை அறிதல் வேண்டும்.

அஞ்சல் துறையில் உருப்படிகளின் விலையையும் இருப்புப் பாதைத் துறையிற் சீட்டுக் கட்டணத்தையும், வணிக