உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நடுவணரசின் கடமை

177

முறையில் உயர்த்திப் பேரூதியம் பெறுவது அரசிற்குத் தகாது. அரசு பொதுமக்கட்குத் தொண்டுசெய்யத் தோன்றியதே யன்றிப் பெரும்பொருளீட்ட ஏற்பட்டதன்று.

வரவுசெலவுக் கணக்கில் தொங்கல் விழும்போது, அடுக்கிய கோடிச் செல்வரையும் கோடி வருமானத்தாரையுமே முதற்கண் அடுத்தல் வேண்டும். அதன் பின்னரே பொதுமக்கள் கையை நோக்குதல் வேண்டும்.

7. ஆற்று நீர்ப்பாசனம் நடுவணாட்சிக்குட்படல்

"நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே உண்டி முதற்றே யுணவின் பிண்டம் உணவெனப் படுவது நிலத்தொடு நீரே

நீரும் நிலனும் புணரி யோரீண்(டு) உடம்பும் உயிரும் படைத்திசி னோரே-

""

(புறம்.18)

நீர்ப்பாசனத்திற்கு உதவும் நீர்நிலைகள் கிணறு, குளம் (ஏரி), ஆறு என மூன்று. அவற்றுள், கிணற்று நீர் ஓர் ஊரில் நன்செயும் புன்செயும் ஆகிய பல செய்கட்குமட்டும் பாயும்; குளத்து (ஏரி) நீர் பலவூர்கட்கும் பாயும்; ஆற்றுநீரோ பல நாடுகட்குப் பாயும். இந்தியா பல நாடு சேர்ந்த கூட்டுநாடு. ஆதலால், அதன் ஆறுகள் பெரும்பாலும் பல நாடுகட்குப் பொதுவாகும், மக்கட்டொகை மிகாத பண்டைக் காலத்தில் ஆறுபாயும் நாடுகட்கெல்லாம் தண்ணீர்த் தட்டு இருந்ததில்லை. அத்

தாகைமிக்க இக்காலத்திலோ அத்தட்டு மிகுதியாகத் தோன்றியுள்ளது. அதனால், ஆறுபாயும் மேன்மட்ட நாடுகளில் அணைகள் கட்டிக்கொள்கின்றனர். ஆதலால் கீழ்மட்ட நாடுகளில் போதிய அளவு ஆற்றுநீர் பாய்வதில்லை. எல்லா நாடுகளையும் சமமாகக் கருதவும் காக்கவும் வேண்டியது நடுவணரசின் கட்டாயக் கடமை. ஆதலால், காவிரிநீர் தமிழ்நாட்டிற் குப் போதிய அளவு ஆண்டுதோறும் வருமாறு, கருநாடக அரசு புதிய அணை கட்டுவதை நடுவணரசு உடனே தடுத்தல் வேண்டும். அதற்கு முன்னது இணங்காவிடின், பின்னது பன்னாடு பாயும் இந்திய ஆறுகளை யெல்லாம் தேசியப்படுத்திவிடல் வேண்டும். இதுவே நிலையான நேர்மையான முடிபாம். மயிலே மயிலே இறகுபோடு என்றாற் போடாது; அதைப் பிடித்து இருகாற்குமிடையே இடுக்கிக் கொண்டு பிடுங்குதல் வேண்டும்.