உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நடுவணரசின் கடமை

181

எழுதப்படிக்கத் தெரிந்தவராயிருத்தல் என்பதை மறந்து விடலாகாது.

தேர்தல் முடிந்தபின் ஏற்படுவது தனிக்கட்சியாட்சியா யினும் கூட்டுக்கட்சி யாட்சியாயினும், சுவிட்சர்லாந்திற் போன்று, தொடங்கிவைப்பு (Initiative), கருத்தெடுப்பு (Referendum) என்னும் இரு குடியரசு முறைமைகளும் தேவையானபோது கையாளப் பெறல் வேண்டும்.

களாகப்

ஆளுங்கட்சி யாட்சியில் விண்ணுலக வின்பமன்றி வீட்டுல கவின்பமே விளையினும், ஐயாண்டு கழிந்தபின் மறுதேர்தல் தப்பாது நிகழ்தல் வேண்டும். பல நூற்றாண்டு பண்பட்டுள்ள குடியரசு நாடாகிய இங்கிலாந்திலேயே, ஐயாண் டிற்கொருமுறை பொதுத் தேர்தல் ஒழுங்காக நடந்து வருகின்றது; ஏதேனும் சிக்கல் நேரின் இடையிலும் பாராளுமன்று கலைக்கப் பட்டுவிடுகின்றது. இந்திய மக்களாட்சியேற்பட்டு இன்னும் அரை நூற்றாண்டுகூட ஆகவில்லை. இங்கிலாந்தில் நூற்றிற்குத் தொண்ணூற்றைவர் எழுதப்படிக்கத் தெரிந்தவர். இங்கோ நூற்றிற் கெழுபதின்மர் எழுதப்படிக்கத் தெரியாதவர்.

இந்தியா

இங்கிலாந்து (U.K.)

ஆண்டு

பரப்பு

3,290,054

1(ச.அமா) 244,030(ச.அமா)

மக்கட்டொகை

547,367,926

55,346,551

1971

நாடுகளும் ஆள்நிலங்களும்

30

4

ஆட்சிமொழி

15

1

இப் பட்டியலினின்று, பிரித்தானியத் தீவுகள்(British Isles) என்றும் ஒன்றிய அரசியம்(United Kingdom) என்றும் சொல்லப் படும் இங்கிலாந்தின் சிறுமையும், இந்தியாவின் பெருமையும் அறியப்படும்.

இற்றை நிலையில், இங்கிலாந்தின் மக்கட்டொகை ஏறத்தாழ 6 கோடி யென்றும், இந்திய மக்கட் இந்திய மக்கட்டொகை

60 கோடிக்கு மேற்பட்ட தென்றுஞ் சொல்லலாம்.

இங்ஙனம் பல்வேறு நாடுகளும் மக்களும் மொழிகளுங் கொண்ட உட்கண்டமாகிய இந்தியப் புது மக்களாட்சி, ஆங்கிலராட்சி முறையைப் பின்பற்றியே படிப்படியாக மெல்ல மெல்ல முன்னேறிச் செல்ல வேண்டும்.

1 ச.அமா. = sq.km