உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




180

30

18.

19.

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

வாங்கியவர், அறப்பணிக்கென்று பணந் தண்டித் தமக்குப் பயன்படுத்திக் கொண்டவர், முன்பணம் வாங்கிக்கொண்டு அதற்குரிய பொருளைக் கொடாத வர், கூலிகுறைத்துக் கொடுத்துப் பணியாளர்க்குக் கொடுமை செய்தவர், கள்ளவிலை வணிகர், கடு வட்டிக்குக் கடன்கொடுப்பவர், வாங்கின கடனைத் தீர்க்கும் நிலைமையிருந்துந் தீர்க்காதவர், இரவல் வாங்கின பொருளைத் திருப்பாது வைத்துக்

கொண்டவர்.

பெண்டிரைக் கெடுத்தவர் - கற்பழித்தவர், பரத்தையர் இல்லம் நடத்தியவர், இளம்பெண்களை நாடுகடத்தி விற்றவர், தம்மை மாணிகராகக் (Bachelors) காட்டிப் பல பெண்டிரை மணந்தவர், மனைவியைக் கொன்றவர்.

உயர்ந்தோரைப் பழிப்பவர் - திருவள்ளுவரை இகழ்பவர், உயர்ந்தோர் படிமைகளை யுடைத்துப் படங்களைக் கிழிப்பவர்.

20. பிரிவினையர் இன குல மத மொழி நாட்டு வெறியர், கூட்டுடைமைக் கொள்கையை எதிர்ப்பவர்.

21. முன்னேற்ற முட்டுக்கட்டையர் -பொறிவினையையும் ஆங்கிலத்தையும் வெறுப்பவர், மூடநம்பிக்கையர், கொச்சைத் தமிழைப் போற்றுபவர்.

22. ஆட்சிக்குப் பயன்படாதவர்

கட்சியர், பழமை போற்றியர்.

23. தன்மான மில்லாதவர்.

24. வீண் செலவாளியர்

-

தனிப்பட்டவர், சிறு

அளவிற்கு மிஞ்சிச் செலவழிப்

பவர், ஆரவார வாழ்க்கையர், வேண்டாவினையை மேற்கொள்பவர்.

வேட்பாளர்

இளமுதிர்ச்சி(precocity)யுள்ளவராயின்

அகவைக்குக் கீழும், இணையற்ற

70 அகவைக்கு மேலும், இருக்கலாம்.

ஆற்றலராயின்

மேற்கூறிய பல்வேறு தீவினைஞர்க்கும் உடந்தையா யிருந்தவரும் தகாதவரே.

எந்நாட்டிலும், உண்மையான குடியரசு முறையில் தேர்தல் நடைபெறுதற்கு அடிப்படை நிலைமை, நேரியர் நூற்றிற்கு எழுபத்தைவர்க்குக் குறையாது தாய்மொழியில்