உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




5

உலகக் கூட்டரசு

1. தனிநாட்டுக் கூட்டுற வியற்கை யமைப்பு

மக்களெல்லாரும் ஆங்காங்கு ஒன்றுகூடி ஒற்றுமை யாகவும் இன்பமாகவும் வாழவேண்டுமென்பதே, இறைவன் ஏற்பாடு அல்லது இயற்கை யமைப்பு. மக்கள் வாழ்க்கைக்கு வேண்டிய பல்வேறு பொருள்களும், பல்வேறிடங்களில் பல்வேறு காலங்களில் பல்வேறு மக்களால் பல்வேறு வகைகளில் தொகுக்கவும் விளைவிக்கவும் செய்யவும் படுகின்றன. ஆதலால், காலமும் இடமும் போன்றே, மக்கள் அமைப்பும் ஆற்றலும் மனப்பான்மையும் அவ்வத் தொழிலுக் கேற்றவாறு வேறுபட்டுள்ளன.

1.

2.

ஐந்திணை நிலவேறுபாடும் அவற்றின் நிலைத்திணை (தாவரம்) இயங்குதிணை (பல்வேறு உயிரினங்கள்) வேறுபாடும்.

பாலைநிலம் முற்காலத்திற் போர்க்களத்திற்குப் பயன் படுத்தப்பட்டது. அதனால், போர்க்களத்தைக் குறிக்கும் பறந்தலை யென்னும் பெயர் பாலைநிலத் தூ ரின் பெயராகவுமிருந்தது. பாலைநிலவாணர் கொள்ளை யையும் போரையும் குலத் தொழிலாகக் கொண்டிருந்த தனால், மறஞ்சிறந்து மறவர் எனப்பட்டனர். சோழ பாண்டியரின் காட்டுப்படை பாலை வாணரைக் கொண்டதே.

ம்

போர் நீங்கி உலக வொற்றுமை நெருங்கிவரும் இக்காலத்தில், வீட்டமைப்பிற்கும் நகரமைப்பிற்குமே பாலைநிலம் பயன் படுத்தப்படும்.

இளவேனில், முதுவேனில், கார், கூதல், முன்பனி, பின்பனி என்னும் அறுவகைப் பெரும்பொழுதும்; காலை, நண்பகல், எற்பாடு (சாயுங்காலம்), மாலை,