உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உலகக் கூட்டரசு

193

3. போரின் கொடுமை

போர் என்பது, பொதுவாக, பல நாட்டிற்கும் பல்லாயிர மக்கட்கும் பல்வகை யிழப்பும் நோவும் விளையுமாறு, பாட்டன் தந்தை ஆசிரியன் போன்ற அரும்பெருங் குரவரையும் கண்ணன்ன கேளிரையும் ஆருயிர் நண்பரையும் எள்ளளவும் பண்பாடின்றி யெதிர்த்து, கொலையும் சித்திரச் சிதைப்பும் உறுப்பறையுஞ் செய்யும் செயற்கைப் பேரழிப்பே.

போர்ப்படைகள் செல்லும் வழியெல்லாம் பயிர் பச்சை கள் நாசம்; கனிமரச் சோலைகளும் ஊர்களுங் கொள்ளை; கைப்படும் பெண்டிர்க் கெல்லாம் கற்பழிப்புஞ் சாவும்.

போர்க்களத்தில் விடுக்கும் அம்புகள் தாண்டிச்சென்று பக்கத்தூர்களையுந் தாக்குவதால், ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே,

"ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்

எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென

""

(புறம்.9)

அறம்பேணும் மறவரசர், போர்க்களத்தை யடுத்துள்ள வூர்கட் கெல்லாம் முன்னெச்சரிக்கை விடுத்தனர். இக்காலத்திலோ, நாடு முழுதும் போர்க்களமாக, முன்னெச்சரிப்பின்றி இரவும் பகலும் நிலம் நீர் வானம் ஆகிய மூவிடத்தினின்றும், ஆயிர வரைக் கொல்லியும் இலக்கவரைக் கொல்லியும் ஆகிய குண்டுமாரி பொழிந்தும், நச்சுப்புகை பரப்பியும், கொல்கதிர் வீசியும், கடுகளவுங் கண்ணோட்டமும் இம்மியும் இரக்கமு மின்றி, பச்சிளங் குழவிகளும் படுக்கை நோயாளியரும் படுகிழவர் கிழவியரும் உட்பட, நகரநகரமாகவும் நாடுநாடாக வும் ஒரே நாழிகையிற் கொன்றழிக்குங் கொடும்பாழ்ப் போர்!

குறித்த களப்போரிலும், கணவனையிழந்த பெண்டிர் கதறியழவும், தந்தையையிழந்த மக்கள் தத்தளிக்கவும், உடன் பிறப்பை யிழந்தவர் உளம் நோகவும், மகனையிழந்த பெற்றோர் மலைத்துப் புலம்பவும், இறந்தவர் போக, எஞ்சியார் கண்ணி ழந்தும் கைகாலிழந்தும் காலமெல்லாங் கட்டப்படு வதைக் கண்ணாரக் கண்டும் போரைக் கருதுபவர் அம்மம்ம அறக் கொடியர் ! அஃறிணை மட்டத்திற்குத் தாழ்ந்த பிறவியர்!