உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




194

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

"மக்கள் யாக்கையிற் பிறத்த லரிதே

மக்கள் யாக்கையிற் பிறந்த காலையும் கூனுங் குருடும் ஊமுஞ் செவிடும்

பேடும் நீங்கிப் பிறத்தலு மரிதே

என்றார் ஓர் ஒளவையார். ஐம்புலப் பொறியும் ஐங்கருமப் பொறியும் நிறைந்த அரியவுடம்பை இறைவன் அருளியிருக்க வும், ஏன் அவற்றை ஒருவன் தானாக இழந்து, தன்னைக் குருடனும் ம் செவிடனும் ம் நாண்டியும்

ம்

முடவனு சப்பாணியும் முண்ட முமாக மாற்றிக்கொள்ள வேண்டும்? காளி கோவிலிற் காவு கொடுக்க வளர்க்கப்படுங் கடாப்போன்றவனோ, றவனோ, செஞ் சோற்றுக் கடன்கழிக்கச் சம்பளங் கொடுக்கப்பெறும் போர் மறவன்? களத்திற் பட்டவன் மனைவி எத்துணை உதவிச் சம்பளம் பெறினும், கணவனொடு கூடிவாழும் களிமகிழ் பெறுவாளோ?

4. பன்னாட்டுக் கழகம் (League of Nations)

முதலாம் உலகப்போர் உலகப்போர் முடிந்தவுடன், முடிந்தவுடன், கணக்கற்ற பொருட் சேதமும் ஆட்சேதமும் அடைந்த நாடுகளெல்லாம் 1919இல் வெர்சேல்சு நகரத்தில் ஒன்றுகூடி, உலகில் எதிர்காலத்திற் போரே நிகழாதவாறு அடியோடு தடுத்தற்கு, செனிவா(Geneva) நகரைத் தலைமை நிலையமாகக் கொண்ட பன்னாட்டுக் கழகத்தை நிறுவின. அறுபத்து மூன்று நாடுகள் உறுப்பாகச் சேர்ந்தன. ஆயின், தலைமையான நாடாகிய அமெரிக்கா(U.S.A) சேராததினாலும், 1925இற்குப் பின் 17 நாடுகள் ஒவ்வொன்றாகப் பிரிந்து போனதினாலும், இற்றிலர்(Hitler) யொடு(Mussolini )

முசொலினி

கூட்டுச்சேர்ந்து ஒப்பந்தங்களை முறித்து நாடுகளைக் கவர்ந்ததினாலும், 1936இலிருந்து பன்னாட்டுக் கழகம் சீர்குலையத் தொடங்கி, 1939இல் 2ஆம் உலகப் போர் தொடங்கியபோது தானாகக் குலைந்துபோயிற்று.

5. ஒன்றிய நாட்டினங்களின் அமைப்பு (United Nations Organisation)

இரண்டாம் உலகப்போரினால் ஏற்பட்ட எல்லையற்ற இழப்பினாலும் சேதத்தினாலும் இடர்ப்பட்ட நாடுகளெல் லாம், 1945ஆம் ஆண்டு சூன் மாதம் 26ஆம் பக்கல் செஅன் பிரான் சிசுக்கோ(San Francisco) நகரில் ஒன்று கூடி, ஒன்றிய நாட்டினங்கள் (United Nations) என்னும் அமைப்பகத்தை