உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உலகக் கூட்டரசு

195

நிறுவின. அது நியூயார்க்கு மாநகரத்தைத் தலை நகரமாகக் கொண்டு 1945 அகுத்தோபர் மாதம் 24ஆம் பக்கல் பணி தொடங்கிற்று. அதன் அமைப்புப் பட்டயம் (Charter) 29 அதிகாரங் களையும் 111 உருப்படிகளையும் (Articles) கொண்டது.

உறுப்பு நாடுகள் : தொடக்கத்தில் 50; இன்று 135 கோன்மை (sovereignty)யுள்ள எந்த நாடும் உறுப்பாகச் சேரலாம்.

நடப்பு மொழிகள்: ஆங்கிலம், பிரெஞ்சு, இசுப்பானியம் (Spanish), இரசியம், சீனம் என்னும் ஐந்து.

நோக்கங்கள்: உலக அமைதியும் காப்புறுதியும் (Security) போற்றல், உறுப்பு நாடுகளிடையே நட்புறவை வளர்த்தல், உலகச் சச்சரவுகளையெல்லாம் உலக நாடுகளின் ஒத்துழைப் பைக் கொண்டே தீர்த்தல், உறுப்பு நாடுகளை யெல்லாம் இப் பணிகளில் ஒன்றுபடுத்தல் என்பன.

அமைப்பக முதன்மை யுறுப்புகள் ஆறு. அவையாவன:

1. பொதுப்பேரவை (General Assembly)

இது எல்லா உறுப்புநாட்டுப் படிநிகராளியரையும் (Representatives) உறுப்பினராகவுடையது; ஆண்டிற்கு ஒருமுறை தப்பாது கூடுவது; பொதுக் கருமங்களை யெல்லாங் கவனிப்பது; 7 உட் குழுக்களைக் கொண்டது. இதன் தலைவ ரும் துணைத் தலைவரும் ஆண்டுதோறும் உறுப்பினரால் தேர்ந்தெடுக்கப் படுவர்.

2. காப்புறுதி மன்றம் (Security Council)

இதன் உறுப்பினர் 15 பேர். அமெரிக்கா (U.S.A.), இங்கிலாந்து(U.K.), இரசியா(U.S.S.R), சீனம் (China), பிரான்சு (France) என்னும் ஐந்தும் நிலையான உறுப்புநாடுகள்; ஏனைப் பதின்மர் பிற நாடுகளினின்று 2/3 பெரும்பான்மையால் தேர்ந்தெடுக்கப்படுவர். இம் மன்றம் இடையறாது பணியாற் றும். இதன் எந்தத் தீர்மானத்தையும் வலியற்றதாகச் செய்து விட, எந்த நிலையான உறுப்பு நாட்டிற்கும் வெட்டதி காரம்(Veto) உண்டு.

3. செயலாளகம் (Secretariat)

இதன் தலைவரான பொதுச் செயலாளரே(Secretary- General), ஒன்றிய நாட்டினங்களின் தலைமை ஆள்வினை அலுவலர். பொதுப் பேரவையும் காப்புறுதி மன்றமும் நிறைவேற்றும் எல்லாத் தீர்மானங்களையும் செயற்படுத்துவது