உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




196

இவர் கடமை.

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

4. பொருளாட்சி குமுகாய மன்றம் (Economic and Social Council)

5. கையடை மன்றம் (Trusteeship Council)

பிற நாடுகளிடம் பாதுகாப்பிற்கு ஒப்படைக்கப்பட்ட சிறுநாடு களைக் கவனிப்பது இதன் பணி.

6. உலகநடுத் தீர்ப்பு மன்றம் (International Court of Justice)

இது ஏகு (Hague) நகரத்திலிருப்பது; 15 தீர்ப்பாளரைக் (Judges) கொண்டது.

ஒன்றிய நாட்டினங்களுக்குத் துணையாக 20 முகவாண் மைகள் (Auxiliary Agencies) உள்ளன.

இவ் வுலக அமைப்பகத்தின் அதிகாரத்திற் குட்படாது, பிரித்தானிய நல்வாழ்வு நாடுகள் (British Common Wealth of Nations) முதலிய 15 அரசிய லமைப்பகங்களும், கொழும்புத் திட்டம் (Co- lombo Plan) முதலிய 13 பொருளாட்சி யமைப்பகங்களும், செங்குறுக்கை (The Red Cross) முதலிய 7 அரசியல் கலவா அமைப்பகங்களும் உலகில் உள்ளன.

6. உலகப் பொது ஆட்சியின் தேவை

பன்னாட்டுக் கழகத்திற் (League of Nations) போன்றே, ஒன்றிய நாட்டினங்களிலும் (UN) பல பல குறைகளும் பிரிவினையும் இருத்தலாலும், போரையும் மக்கட் பெருக்கத்தையும் தடுக்கும் வழியின்மையாலும், உலகமுழுதும் ஒரே ஆட்சி யேற்படல் இன்றிமையாததாம். அதற்குத் தூண்டும் நிலைமைகள் ஆவன: 1. ஒன்றிய நாட்டினங்களில் (UN) எல்லா நாடுகளும் இன்றும் சேராமை.

2. காப்புறுதி மன்றத்தில் (Security Council), 5 நாடுகள் நிலையான உறுப்புகளாகவும் ஏனை நாடுகள் நிலை யில்லா உறுப்புகளாகவும் இருத்தல்.

3. அம் மன்றத்தின் நிலையான உறுப்புகட்கு வெட்டதி காரம் (Veto) இருத்தல்.

4. ஒத்த உடன்பிறப்புணர்ச்சியின்றி வல்லரசுகள் எனவும் வல்லாவரசுகள் எனவும் உறுப்புகளுள் ஏற்றத்தாழ் விருத்தல்.