உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




202

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

வரும் தம்மை உலகக் குடிமகனார் அல்லது மகளார் (world citizen) என்று ஒத்த உடன்பிறப்பாகக் கருதி யொழுகுதல் வேண்டும்.

நியூயார்க்கையே அரசிருக்கையாகக் கொண்டு, ஒன்றிய நாட்டினங்கள் அமைப்பகத்தை உலகாளுமன்றமாக (International Parliament) மாற்றி, எல்லா நாடுகளையும் அதன் உறுப்பாக்குதல் வேண்டும். இந்தியா போன்ற பெரு நாடுகட்கு ஐந்து உறுப்பாண்மை (Membership) அளிக்கலாம். சீனம் போன்ற மாபெரு நாடுகட்குப் பத்துவரையும் அளிக்க லாம்.

ஒவ்வொரு நாட்டிலும், அவ்வந் நாட்டுமக்களே உலகாளு மன்ற வுறுப்பினராக ஒருவரையோ ஐவரையோ தேர்ந்தெடுத்தல் வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பி னரே தமக்குள் ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தல் வேண்டும். அத் தலைவரே தலைமை மந்திரியாராயிருந்து, பிற மந்திரிமாரைத் தெரிந்து கொள்வார். உலகாளு மன்றத்திற்கு ஓர் அரங்கே (Chamber) போதும்; கீழவை மேலவையென்று ஈரரங்கு தேவையில்லை.

தலைமை மந்திரியார், உலகாளுமன்ற வுறுப்பிரைக் கொண்டு மன்றத் தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளல் வேண்டும்.

ஒவ்வொரு

ரு

கண்டத்திற்கும் உலகாட்சித் துணைத் தலைவர் ஒருவர் இருத்தல் வேண்டும். அமெரிக்காவை கண்டமாகக் கருதலாம். ஒவ்வொரு துணைத் தலைவரையும் அவ்வக் கண்ட நாடுகளே தேர்ந்தெடுத்தல் வேண்டும். துணைத்தலைவர் அறுவரும் தம்முள் ஒருவரைத் தலை வராகத் தேர்ந்தெடுத்தல் வேண்டும்.

உலகாளு மன்றம் ஒன்றிய நாட்டினங்களின் பொதுப் பேரவை போலும், உலகாட்சி மந்திரிசபை ஒன்றிய நாட்டினங் களின் காப்புறுதி மன்றம் போலும் செயற்பட வேண்டும்.

செயலாளகமும் ஒன்று அமைதல் வேண்டும். அது குடிமைத் (Civil) துறை, படைத் (Military) துறை என்று இரு று பிரிவினதாயிருத்தல் வேண்டும்.

உலகத் தீர்ப்பு மன்றம் இன்று ஏகில் (Hague) உள்ளதே தொடரலாம்.

உலகநாடுகளின் வழ க்கமான தேர்தலும் ஆட்சி முறையும் இன்றுபோல் என்றும் தொடரும். ஆயின், சில